இந்தியா

மின்சாரம் தாக்கி இருவர் பலி

Added : செப் 13, 2020
Share
Advertisement

காட்டேரிக்குப்பம்; கட்டுமான பணியின் போது மின்சாரம் தாக்கி இரு தொழிலாளர்கள் இறந்த சம்பவத்தில் கட்டடத்தின் உரிமையாளர் மற்றும் ஒப்பந்ததாரர் மீது போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.காட்டேரிக்குப்பத்தை சேர்ந்தவர் செல்வகுமார்,35; சிமெண்ட் கலவை இயந்திரம் வைத்து தொழில் செய்து வந்தார். இவர் நேற்று முன்தினம் அதே கிராமத்தில் மகேந்திரன் என்பவர், கட்டிவரும் கட்டடத்தின் மூன்றாம் தளத்தில் ஜல்லி போடும் பணி மேற்கொண்டார். இவருடன், விழுப்புரம் மாவட்டம், ஆயந்துாரை சேர்ந்த நவீன்குமார், 24; உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தனர்.ஜல்லி போட்டு முடிந்த பின், சிமெண்ட் கலவையை மேலே கொண்டு செல்ல பயன்படுத்திய 'லிப்ட்டில்' இருந்த இரும்பு ரோப்பை கழற்றியபோது, ரோப் உயர் மின்னழுந்த கம்பியில் விழுந்தது. இதில், செல்வகுமார் மற்றும் நவீன்குமார் ஆகியோர் மின்சாரம் தாக்கி இறந்தனர்.இதுகுறித்து காட்டேரிக்குப்பம் போலீசார், கட்டடத்தின் உரிமையாளரான ஆசிரியர் மகேந்திரன்,39; கட்டட ஒப்பந்ததாரர் நந்தகுமார்,34; ஆகியோர் மீது 'எவ்வித பாதுகாப்பு ஏற்படும் செய்யாமல், மனித உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் வகையில், தொழிலாளர்களிடம் வேலை வாங்குவது (304-A)' உள்ளிட்ட பிரிவுகளில் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X