இந்தியா

சாராயக்கடை காசாளர் கொலை

Added : செப் 13, 2020
Share
Advertisement

காரைக்கால்; குடிபோதையில் சாராயக்கடை காசாளரை அடித்து கொலை செய்த மாணவர் இருவரை போலீசார் கைது செய்தனர்.திருநள்ளாறு, செல்லுார் அகலங்கண்ணு சாலையை சேர்ந்தவர் அழகர்சாமி மகன் ரவிச்சந்திரன்,48; அதேபகுதியில் உள்ள சாராயக்கடையில் காசாளராக வேலை செய்து வந்தார்.இவர்நேற்று முன்தினம் இரவு பணியை முடிந்துவிட்டு வீட்டு வாசல் முன்பு நின்றுக் கொண்டிருந்தார். அப்போது அதேபகுதியை சேர்ந்த கல்லுாரி மாணவர் செல்வேந்திரன் மகன் மகேந்திரன்,22; அவரது நண்பரான ஐ.டி.ஐ., படித்து வரும் பாலாஜி மகன் ஜெயபாலாஜி,19; இருவரும் குடிபோதையில் பைக்கில் வேகமாக சென்றனர். அதனை ரவிச்சந்திரன் கண்டித்தார்.அதில், அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. ஆத்திரமடைந்த மகேந்திரன் தாக்கியதில், ரவிச்சந்திரன் மயங்கி விழுந்தார். உடன் அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு, அரசு பொது மருந்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் இறந்தார்.இதுகுறித்து ரவிச்சந்திரன் மனைவி விஜயா கொடுத்த புகாரின் பேரில் திருநள்ளாறு போலீசார் கொலை வழக்கு பதிந்து மகேந்திரன் மற்றும் ஜெயபாலாஜி, இருவரையும் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X