இந்தியா

மதிப்பீட்டு குழுவை வரும் 16ம் தேதி கூட்ட சபாநாயகரிடம் அன்பழகன் எம்.எல்.ஏ., மனு

Added : செப் 13, 2020
Share
Advertisement

புதுச்சேரி; முதல்வரின் அறிவிப்பை உடனுக்குடன் செயல்படுத்த வரும் 16ம் தேதி மதிப்பீட்டு குழுவை கூட்ட வேண்டும் என அன்பழகன் எம்.எல்.ஏ., சபாநாயகரிடம் மனு அளித்துள்ளார்.

மனுவில் கூறியிருப்பதாவது:கொரோனாவால் பாதித்த குடும்பங்களுக்கும், கொரோனா நோய்த்தொற்று ஏற்பட்டு வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டவர்களுக்கும் முதல்வர் அறிவித்த ரூ.750க்கான உணவுப் பொருட்கள் இதுவரை சரியாக வழங்கப்படவில்லை. அதேபோன்று இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.1 லட்சம் வழங்கப்படும் என்ற முதல்வரின் அறிவிப்பின்படி இன்றுவரை ஒருவருக்குக்கூட வழங்கவில்லை.கொரோனா மரணம் தேசிய அளவில் 1.72 சதவீதம் உள்ள நிலையில், புதுச்சேரியில் 1.90 சதவீதமாக அதிகரித்துள்ளது. இதனால் மக்கள் பயம் கலந்த பீதியுடன் வாழும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.முதல்வரின் அறிவிப்பை உடனுக்குடன் செயல்பட வேண்டிய அவசியம் குறித்தும், தேவையான உரிய ஆலோசனை வழங்க, மதிப்பீட்டு குழுவை வரும் 16ம் தேதி காலை 10 மணியளவில் சட்டசபை ஆய்வு கூட்ட அரங்கில் கூட்ட வேண்டும்.இதில் மதிப்பீட்டு குழுவோடு, பொதுகணக்குக்குழு தலைவரின் அனுமதியோடு அக்குழுவின் உறுப்பினர்களும் கலந்து கொள்ளவும் தாங்கள் ஏற்பாடு செய்ய வேண்டும்.நடைபெற இருக்கும் இக்கூட்டத்தில் முதல்வரின் கொரோனா பாதிப்பு நிவாரண அறிவிப்புகளை உடனே செயல்படுத்த தலைமை செயலர், வருவாய்த்துறை செயலர், நிவாரணம் மற்றும் மறுவாழ்வு செயலர், கொரோனா நிவாரண மருத்துவ பணிக்கான கலெக்டர், கொரோனா செயல் அதிகாரிகள், சுகாதாரத்துறை செயலர், சுகாதாரத்துறை இயக்குனர் உள்ளிட்ட இப்பணியில் உள்ள உயர் மருத்துவ குழுவினர் பங்கேற்க செய்ய வேண்டும்.மேலும் சமூக இடைவெளி மற்றும் முகக்கவசம் அணியாத மக்களுக்கான நடவடிக்கைகளை காவல்துறை எடுக்க, டி.ஜி.பி., எஸ்.எஸ்.பி., உள்ளிட்ட காவல்துறை உயர் அதிகாரிகளுக்கும் தாங்கள் அழைப்பு விடுக்க வேண்டும். மக்களின் உயிர் சம்பந்தமான நடவடிக்கைக்காக கூட்டப்படும் இக்கூட்டத்திற்கு தாங்கள் உரிய வழி செய்ய வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X