இந்தியா

3,792 பேருக்கு கொரோனா பரிசோதனை புதிதாக 419 பேருக்கு தொற்று; 5 பேர் பலி

Added : செப் 13, 2020
Share
Advertisement

புதுச்சேரி; புதுச்சேரியில் நேற்று அதிகபட்சமாக 3,792 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டதில் புதிதாக 419 பேர் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 5 பேர் இறந்துள்ளனர்.

இதுகுறித்து சுகாதாரத்துறை இயக்குனர் மோகன்குமார் கூறியதாவது:புதுச்சேரியில் நேற்று அதிகபட்சமாக 3,792 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் புதுச்சேரி - 380, காரைக்கால் - 15, ஏனாம் - 24 என மொத்தம் 419 பேருக்கு தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும் 5 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.இதனால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 370 ஆக உயர்ந்துள்ளது.

இறப்பு விகிதம் 1.90 சதவீதமாக உள்ளது.மாநிலத்தில் இதுவரை 19,439 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 14,238 பேர் அதாவது 73.24 சதவீதம் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். நேற்று மட்டும் புதுச்சேரி -388 பேர், காரைக்கால் -12 பேர், ஏனாம்-45 பேர், மாகி-10 பேர் என மொத்தம் 455 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.

புதுச்சேரியில் 2,745 பேர், காரைக்காலில் 196 பேர், ஏனாமில் 106, மாகியில் 8 பேர் என 3,055 பேர் வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அதேபோல், புதுச்சேரியில் 1,473 பேர், காரைக்காலில் 94 பேர், ஏனாமில் 182 பேர், மாகியில் 27 பேர் என மொத்தம் 1,776 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.மாநிலத்தில் தற்போது வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் உட்பட மொத்தமாக 4,831 பேர் சிகிச்சையில் உள்ளனர். இதுவரை 95,919 பேருக்கு பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளது. இதில் 74,136 பேருக்கு தொற்று இல்லை என முடிவு வந்துள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X