பொது செய்தி

தமிழ்நாடு

'நீட்' தேர்வு: கோவையில் 10 ஆயிரம் பேர் பங்கேற்பு

Added : செப் 13, 2020
Share
Advertisement

கோவை:கோவையில் இன்று, 16 மையங்களில் நடக்கும், 'நீட்' தேர்வில், 10 ஆயிரம் மாணவர்கள் பங்கேற்று எழுதவுள்ளனர்.'நீட்' தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளதை அடுத்து, இன்று தேர்வு நடக்கிறது. கோவை மாவட்டத்தை பொறுத்தவரை, 16 மையங்கள் அமைக்கப்பட்டு, மதியம் 2:00 முதல் மாலை 5:00 மணி வரை தேர்வு நடக்கிறது. 10 ஆயிரத்து ௬௨௭ பேர் எழுதுகின்றனர்.கொரோனா தடுப்பு நடவடிக்கையாக, ஒவ்வொரு தேர்வு மையத்திலும் கிருமிநாசினி தெளிக்கப்பட்டுள்ளது. மாணவ, மாணவியருக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு அறையிலும், 12 பேர் மட்டுமே தேர்வு எழுதுவர். இதை கண்காணிக்க, அறைக்கு இரண்டு கண்காணிப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.தேர்வு நடைபெறும் மையங்களுக்கு தடையில்லா மின்சாரம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் கவனத்துக்கு...தேர்வு எழுதும் மாணவ, மாணவியர் கட்டாயம் முக கவசம் அணிந்து, காலை 11:00 மணிக்குள் தேர்வு எழுதும் மையத்துக்கு வர வேண்டும். மாணவிகள், கம்மல், கொலுசு, நகைகள், வளையல் அணிய அனுமதி கிடையாது. தெர்மல் ஸ்கேனர் மூலம் உடல் வெப்பநிலை கண்டறியப்பட்டு, 11:30 மணிக்கு ஒருவர் பின் ஒருவராக மையத்தின் உள்ளே அனுமதிக்கப்படுவர். உடல் வெப்பநிலை அதிகமாக இருப்பவர்கள், தனி அறையில் தேர்வு எழுதுவர். பகல்1:30 மணிக்கு, சமூக இடைவெளி கடைபிடித்து தேர்வு எழுதும் அறைக்கு செல்ல அனுமதிக்கப்படுவர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X