இந்தியா

11 வீதிகளில் உள்ளூர் ஊரடங்கு கலெக்டர் அருண் அறிவிப்பு

Added : செப் 13, 2020
Share
Advertisement

புதுச்சேரி; கட்டுப்பாட்டு மண்டல பகுதியில் உள்ள 11 வீதிகளில் நாளை ௧4ம் தேதி முதல் ஏழு நாட்களுக்கு உள்ளூர் ஊரடங்கு அமல்படுத்தப்பட உள்ளது.இது குறித்து கலெக்டர் அருண் பிறப்பித்துள்ள உத்தரவு:அதிகரித்து வரும் கொரோனா தொற்றினை கருத்தில் கொண்டு கட்டுப்பாட்டு மண்டல பகுதிகளில் உள்ள 11 வீதிகளில் நாளை 14ம் தேதி முதல் 20ம் தேதி வரை ஏழு நாட்களுக்கு உள்ளூர் ஊரடங்கு அமல்படுத்தப்படுகின்றது.அதன்படி காராமணிக்குப்பம் பாவேந்தர் தெரு, பவழ நகர் முத்தலாம்மன் கோவில் தெரு, உழவர்கரை நண்பர்கள் நகர், காட்டேரிக்குப்பம் மேட்டுதெரு, இருளன்சந்தை வ.உசி., தெரு, திலாசுபேட்டை தேரோடும் வீதி, அபிேஷகபாக்கம் அம்பேத்கர் தெரு, மடுகரை மெயின்ரோடு, மாரியம்மன் கோவில் தெரு, புது சாரம் ராஜிவ் காந்தி தெரு, 2-வது குறுக்கு, லாஸ்பேட்டை அசோக் நகர் பாரதிதாசன் வீதி ஆகிய பகுதிகளில் உள்ளூர் ஊரடங்கு அமல்படுத்தப்படுகின்றது.அந்தந்த பகுதிகளில் உள்ள ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அதிகாரியின் ஆலோசனையின்படி கட்டுப்பாட்டு மண்டல பகுதியில் எல்லை வரையறை செய்யும்.இப்பகுதியில் உள்ள அனைத்து கடைகள், நிறுவனங்கள், தொழிலகங்கள், தனியார் அலுவலகங்கள் மூடப்பட வேண்டும்.காய்கறி கடைகள், மளிகை கடைகள் மட்டும் காலை 6 மணி முதல் மதியம் 12 மணி வரை திறந்து இருக்கலாம். அரசு அலுவகலங்கள், மருத்துவமனை, கிளினிக்,பால் பூத்துகள் திறந்து இருக்கலாம். மருத்துவ அவசரம் உள்ளிட்ட அத்தியாவசிய காரணமின்றி வெளியே செல்ல அனுமதி இல்லை. இப்பகுதியில் மருத்துவ முகாம் நடத்தி காய்ச்சல் கண்டறியப்பட வேண்டும்.இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X