பொது செய்தி

தமிழ்நாடு

கோவையில் புதிய அரசு மகளிர் கல்லுாரி இடம் தேர்வு செய்து அனுப்ப உத்தரவு

Added : செப் 13, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement

கோவை:கோவையில் அமைய உள்ள புதிய அரசு மகளிர் கலை அறிவியல் கல்லுாரிக்கு இடம் தேர்வு செய்து அறிக்கை அனுப்ப கல்லுாரி கல்வி இயக்குனர் அறிவுறுத்தியுள்ளார்.தமிழக முதல்வர் மார்ச், 20ம் தேதி சட்டசபையில், 110 விதியில் ஒரு அறிவிப்பை வெளியிட்டார். இதில், 'ஏழு புதிய கலை மற்றும் அறிவியல் கல்லுாரிகள் அமைக்கப்படும். வரும் கல்வியாண்டு முதல் இக்கல்லுாரிகள் செயல்படும்' என, அறிவித்தார்.இதன்படி, கோவை, புலியகுளம் பகுதியில் ஒரு அரசு மகளிர் கலை, அறிவியல் கல்லுாரி அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. புதிய கல்லுாரியில், பி.ஏ., தமிழ், பி.ஏ., ஆங்கிலம், பி.காம்., (ஆங்கில வழி), பி.எஸ்சி., கணிதம் (ஆங்கில வழி), பி.எஸ்சி., கம்ப்யூட்டர் சயின்ஸ் (ஆங்கில வழி) ஆகிய ஐந்து பாடப்பிரிவுகளுடன் துவங்கப்படுகிறது.மண்டல கல்லுாரி கல்வி இணை இயக்குனருக்கு கல்லுாரி கல்வி இயக்குனர் அனுப்பிய உத்தரவில், 'கல்லுாரி அமைய பொருத்தமான அரசு கட்டடத்தை தேர்வு செய்ய வேண்டும். அரசு கட்டடம் எதுவும் இல்லை என்றால், தனியார் கட்டடத்தை தேர்வு செய்யவும் உரிய நடவடிக்கை மேற்கொண்டு அதன் அறிக்கையை அனுப்பி வைக்க வேண்டும்' என, குறிப்பிடப்பட்டுள்ளது.கோவை புலியகுளம் பகுதியில், புதிய அரசு மகளிர் கலை, அறிவியல் கல்லுாரி அமைக்க, 3 ஏக்கர் நிலத்தை தேர்வு செய்யும் பணி வேகமெடுத்துள்ளது. முதற்கட்டமாக, மாநகராட்சி பள்ளி கட்டடம் உள்பட சில இடங்களை தேர்ந்தெடுத்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
R.MURALIKRISHNAN - COIMBATORE,இந்தியா
13-செப்-202013:52:41 IST Report Abuse
R.MURALIKRISHNAN பொள்ளாச்சியை டெவலப் செய்ய ஆண்ட/ஆளும் எந்த அரசும் ஒன்றும் செய்யவில்லை.ஓட்டுக்கு வாக்குறுதி மட்டும் அளிப்பார்கள்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X