இந்தியா

2 இடங்களில் பரிசோதனை முகாம் குயவர்பாளையம் நலவாழ்வு மையம் ஏற்பாடு

Added : செப் 13, 2020
Share
Advertisement

புதுச்சேரி; குயவர்பாளையம் சுகாதாரம் மற்றும் நல வாழ்வு மையம் சார்பில், 'ஆர்டி - பிசிஆர்', ரேபிட் ஆண்டிஜென் கிட் மூலமாக இரண்டு இடங்களில் கொரோனா பரிசோதனை முகாம்கள் நேற்று நடந்தது.

'ஆர்டி - பிசிஆரபரிசோதனை சாரத்தில் உள்ள தென்றல் நகரில் 'ஆர்டி - பிசிஆர்' முறையிலான பரிசோதனை முகாம் நடத்தப்பட்டது.நலவாழ்வு மையத்தின் முதன்மை மருத்துவ அதிகாரி அஸ்வினி முன்னிலையில், அரசு மருத்துவமனை டாக்டர் பிரகாஷ் ராவ் தலைமையிலான மருத்துவக் குழுவினர் உமிழ்நீர் மாதிரிகளை சேகரித்தனர்.மொத்தம் 145 பேருக்கு உமிழ்நீர் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு பரிசோதனை கூடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.நவீனா கார்டன் பகுதியில் வீடு வீடாச் சென்று கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. மருத்துவ அதிகாரி அஜ்மல் அகமது, பொது சுகாதார செவிலிய அதிகாரி கீதா ஆகியோர் முன்னிலையில், உமிழ்நீர் மாதிரி சேகரிக்கப்பட்டு, ரேபிட் ஆண்டிஜென் கிட் மூலமாக பரிசோதனை நடத்தப்பட்டது.மாதிரி சேகரிக்கப்பட்டவர்களுக்கு 20 நிமிடங்களில் பரிசோதனை முடிவுகள் தெரிவிக்கப்பட்டன. 79 பேருக்கு பரிசோதனை நடத்தப்பட்டதில் 5 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது.அவர்கள் உடனடியாக கதிர்காமத்தில் உள்ள கொரோனா மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.முகாமில் பரிசோதனையுடன், கொரோனா குறித்த விழிப்புணர்வும் ஏற்படுத்தப்பட்டது. கைகளை அடிக்கடி கழுவுவது, சமூக இடைவெளியை பின்பற்றுவது குறித்து சுகாதார உதவி ஆய்வாளர்கள் அய்யனார், வெங்கட்ராமன் மற்றும் ஏ.என்.எம்., ஆஷா ஊழியர்கள் விளக்கி கூறினர்.இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் பரிந்துரைபடி, புதுச்சேரியில் கொரோனா பரிசோதனைகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X