சம்பவம் செய்தி

தமிழ்நாடு

திருப்பூரில் கிசான் திட்ட மோசடி: 941 பேரிடம் ரூ. 40 லட்சம் வசூல்

Added : செப் 13, 2020
Share
Advertisement

திருப்பூர்:கிசான் திட்ட உதவித்தொகை, 40 லட்சம் ரூபாயை, திருப்பூர் மாவட்ட வேளாண்துறை திரும்ப பெற்றுள்ளது.கடந்த மார்ச் மாதத்திற்கு பிறகு, பிரதமரின் கிசான் திட்டத்தில், புதிய உறுப்பினர் சேர்க்கை நடந்தது. பலரும், விவசாயி என்ற பெயரில் இணைந்தனர். அவர்களுக்கு, முதல்கட்ட தவணை, 2,000 ரூபாய் வழங்கப்பட்டது. சிலருக்கு, இரண்டாம் கட்ட தவணையும் வழங்கப்பட்டது.திருப்பூர் மாவட்டத்தில், ஏற்கனவே, 80 ஆயிரம் விவசாயிகள் இத்திட்டத்தில் இணைந்தனர். நடப்பாண்டு, 4,274 பேர் இணைக்கப்பட்டனர். கலெக்டர் விஜயகார்த்திகேயன் கூறுகையில்,''தகுதியற்ற நபர்களுக்கு உதவி வழங்குவதாக எழுந்த புகார் அடிப்படையில், வருமான வரி செலுத்தும் விவசாயிகள் உட்பட, 941 பேர் நீக்கப்பட்டுள்ளனர். அவர்களிடம் இருந்து, 40 லட்சம் ரூபாய் முழுமையாக திரும்ப பெறப்பட்டுள்ளது,'' என்றார்.வெளிமாவட்டங்களில் நிலம் வைத்துள்ள, 1,300 விவசாயிகள், திருப்பூர் மாவட்டத்தில் உள்ள வங்கி கணக்கில் உதவி பெற்றுள்ளனர். அவர்கள் கணக்கில் இருந்தும், நிதியை திரும்ப வசூலிக்கும் பணி நடந்து வருகிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X