இந்தியா

திறப்பு விழாவிற்கு தயாராகும் மேம்பாலம்

Added : செப் 13, 2020
Share
Advertisement
 திறப்பு விழாவிற்கு தயாராகும் மேம்பாலம்

வில்லியனுார்; அரும்பார்த்தபுரம் ரயில்வே மேம்பாலம் திறப்பு விழாவின்போதே திருக்காஞ்சி மேம்பாலத்தின் திறப்பு விழாவைவும் நடக்கலாம் என்பதால் பாலத்தின் இறுதிகட்ட பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.புதுச்சேரி நகரப்பகுதி வழியாக கடலுார் செல்லும் சாலையில் போக்குவரத்து நெரிசலால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். பொதுமக்கள் நலன் கருதி கோரிமேட்டில் இருந்து மேட்டுப்பாளையம், மூலகுளம் அரும்பார்த்தபுரம், ஒதியம்பட்டு வழியாக சங்கராபரணி ஆற்றில் மேம்பாலம் அமைத்து திருக்காஞ்சி வழியாக கடலுாரை இணைக்கும் வகையில் கடந்த என்.ஆர்.காங்., ஆட்சியில் புதிய மேம்பாலம் அமைக்கநடவடிக்கை எடுக்கப்பட்டது.நபார்டு திட்டத்தின் மூலம் புதுச்சேரி பொதுப்பணித்துறை நீர்பாசன கோட்டம்-2 சார்பில் ரூ.27.13 கோடி செலவில் மேம்பாலம் அமைக்கும் பணியை கடந்த 2014 ஆக.,18ம் தேதி அப்போதையை முதல்வர் ரங்கசாமி பூமி பூஜை செய்து பணியை துவக்கி வைத்தார். மதுரை கே.எஸ் நிறுவனம் சார்பில் மேம்பாலம் அமைக்கும் பணியை துவங்கி தொடர்ந்து செய்து வருகிறது.7.5 மீட்டர் அகலம் கொண்ட சாலையும், ஒன்னேமுக்கால் மீட்டரில் இருபுறத்திலும் நடைபாதையுடன் மேம்பாலம் அமைக்கப்பட்டுள்ளது. ஆற்றுப்பகுதியில் மழைக் காலத்தில் வெள்ள நீர் சிரமம் இல்லாமல் செல்லும் வகையில் 13 கண்களை கொண்ட மேம்பாலமாக இந்த பாலம் வடிவமைத்துள்ளனர்.மேம்பாலத்தின் முழு பணியும் நிறைவடைந்துள்ள நிலையில் பாலத்தின் இரு பகுதியிலும் உள்ள இணைப்புச் சாலைகள் அமைக்கும் பணிகள், மின் விளக்கு வசதிகள் ஏற்படுத்தும் பணிகளை அதிகாரிகள் முடுக்கிவிட்டுள்ளனர்.அரும்பார்த்தபுரம் ரயில்வே மேம்பாலம் திறப்பு விழாவின்போதே திருக்காஞ்சி மேம்பாலத்தையும் திறப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளதால், திருக்காஞ்சி மேம்பாலத்தில் செய்ய வேண்டி உள்ள ஒரு சில பணிகளையும் விரைந்து முடிப்பதற்கான வேலையில் அதிகாரிகள்இறங்கி உள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X