அரசியல் செய்தி

தமிழ்நாடு

'எம்மொழியும் கற்பேன் டா': பா.ஜ.,வின் பதிலடி டீ-சர்ட்

Added : செப் 13, 2020
Share
Advertisement
 'எம்மொழியும் கற்பேன் டா': பா.ஜ.,வின் பதிலடி டீ-சர்ட்

திருப்பூர்:தி.மு.க.,வுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், 'எம்மொழியும் கற்பேன்டா' வாசகம் பொறித்த டீ சர்ட்களை, திருப்பூர் பா.ஜ.,வினர் களமிறக்கியுள்ளனர்.இந்தி எதிர்ப்பு விவகாரத்தை கையில் எடுத்துள்ள தி.மு.க.,வினர், திருப்பூர் ஆடை உற்பத்தி நிறுவனத்தினரிடம் இருந்து, 'இந்தி தெரியாது போடா' என்ற வாசகம் பொறித்த டீ-சர்ட் தயாரித்து, அணிந்து வருகின்றனர்.தி.மு.க.,வுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், திருப்பூர் மாவட்ட பா.ஜ.,வினர், மும்மொழி ஆதரவு டீ சர்ட்டுகளை களமிறக்கியுள்ளனர். 'தமிழாய்ந்த தமிழனடா; எம்மொழியும் கற்பேன்டா; தடுக்க நீ யாரடா' என்ற வாசகம் பொறித்த டீ- சர்ட் தயாரித்து, அணிந்து வருகின்றனர். சமூகவலை தளங்களில் வைரலாக்கியும் வருகின்றனர்.
பா.ஜ., ஊடகப்பிரிவு திருப்பூர் மாவட்ட தலைவர் நரேன்பாபு கூறுகையில்,''மும்மொழி எதிர்ப்பாளர்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் முதல்கட்டமாக, 1,000 டீ-சர்ட் ஆர்டர் பெற்று, உள்ளூர் பிரமுகர்களுக்கு வழங்கியுள்ளோம். வரும் 17ல், பிரதமர் மோடி பிறந்தநாள். அன்று அணிவதற்கு, பல்வேறு மாவட்டங்களில் உள்ள கட்சியினர், எங்களை தொடர்பு கொண்டு, டீ-சர்ட் தயாரித்து கேட்கின்றனர்; அதிகளவு ஆர்டர் வழங்கவுள்ளோம்,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X