இந்தியா

கொரோனா நெருக்கடி காலகட்டத்தில் தற்கொலை எண்ணங்கள் அதிகரிப்பு:ஜிப்மர் இயக்குனர் ராஜேஷ் அகர்வால் தகவல்

Added : செப் 13, 2020
Share
Advertisement

புதுச்சேரி; கொரோனா நெருக்கடி காலகட்டத்தில் தற்கொலை எண்ணங்கள் அதிகரித்துள்ளது என ஜிப்மர் இயக்குனர் ராஜேஷ் அகர்வால் தெரிவித்தார்.

மத்திய அரசின் புதுச்சேரி மக்கள் தொடர்பு கள அலுவலகம், அரசு பொறியியல் கல்லுாரி என்.எஸ்.எஸ்., சார்பில் 'கொரோனா நெருக்கடி நிலைமையும், தற்கொலை தடுப்பும்' என்ற தலைப்பில் சிறப்பு காணொளி கருத்தரங்கம் நடந்தது.மக்கள் தொடர்பு கள அலுவலக உதவி இயக்குனர் சிவக்குமார் வரவேற்றார். அரசு பொறியியல் கல்லூரி முதல்வர் கோதண்டராமன் தலைமை தாங்கினார்.

சென்னை மண்டல மக்கள் தொடர்பு அலுவலக இணை இயக்குனர் காமராஜ் அறிமுக உரை ஆற்றினார். லாஸ்பேட்டை தாகூர் அரசு கல்லூரியின் உளவியல்துறை உதவிப் பேராசிரியை ரோசலிண்ட் பிரபா சிறப்புரை ஆற்றினார்.கருத்தரங்கை துவக்கி வைத்த ஜிப்மர் இயக்குனர் ராஜேஷ் அகர்வால் பேசியதாவது:உலகில் எல்லா கலாசாரங்களிலும், சமூகங்களிலும,் நாடுகளிலும் தற்கொலை உள்ளது. அனைத்துத் தற்கொலைகளையும் தடுக்க முடியாவிட்டாலும் பலவற்றை நம்மால் தவிர்க்க முடியும்.இந்த ஆண்டு அதாவது 2020 ஆண்டு கொரோனா ஆண்டாக இருக்கின்றது. கொரோனா நெருக்கடி காலகட்டத்தில் தற்கொலை எண்ணங்கள் அதிகரித்துள்ளது. இந்தக் கொரோனா பெருந்தொற்றுக் காலத்தில் தனிமைப்படுத்தப்படுதல் குறித்த பயம் பெரும்பாலோருக்கும் உள்ளது.வேலைவாய்ப்பின்மை, நிச்சயமற்ற தன்மை, நோய் குறித்து எதுவும் தெரியாத நிலை போன்ற பல விஷயங்கள் மனச்சோர்வு மற்றும் மன அழுத்தத்தை ஏற்படுத்துகின்றன. இவை கவனம் பெறாமல் போகும்போது தற்கொலை எண்ணம் தலையெடுக்கின்றது.இந்தத் தருணத்தில் மன ஆலோசனை கொடுத்தால் தற்கொலைக்கு முயலும் எண்ணத்தை அகற்ற முடியும். இவ்வாறு அவர் பேசினார்.தொடர்ந்து நடந்த சிறப்பு அமர்வில் வில்லியனூர் கஸ்துார்ரிபாய் அரசு மகளிர் கல்லுாரியின் உளவியல்துறை உதவிப் பேராசிரியை புவனேஸ்வரி, வளர் இளம் பெண்கள் சந்திக்கும் பிரச்னைகளுக்கு விளக்கம் அளித்தார்.அரசு பொறியியல் கல்லுாரி என்.எஸ்.எஸ்., அலுவலர் சிவகுமார் மாணவர்களுடன் கலந்துரையாடி அவர்களின் சந்தேகங்களுக்கு விளக்கம் அளித்தார். கள விளம்பர உதவியாளர் தியாகராஜன் நன்றி கூறினார்.பேராசிரியர்கள், நாட்டு நலப் பணித்திட்ட மாணவர்கள் 300 பேர் ஆன்லைன் மூலம் இந்தக் காணொளி கருத்தரங்கில் கலந்து கொண்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X