இந்தியா

வில்லியனுார் ஸ்டேஷனுக்கு கிருமி நாசினி தௌிப்பு

Added : செப் 13, 2020
Share
Advertisement

வில்லியனுார்; கொலை வழக்கில் கைது செய்யப்பட்டவருக்கு கொரோனா தொற்று உறுதியானதால், வில்லியனுார் போலீஸ் ஸ்டேஷன் முழுவதும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.கணுவாப்பேட்டையை சேர்ந்தவர் அய்யனார் மகன் ராமு,26; தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்த இவர், கடந்த 9ம் இரவு 9:30 மணியளவில் ஒதியம்பட்டு நான்கு ரோடு பகுதி அருகே தலையில் பாறாங்கல் போட்டு கொலை செய்யப்பட்டு கிடந்தார்.வில்லியனுார் போலீசார் வழக்குப் பதிந்து, சப் இன்ஸ்பெக்டர் குமார் உள்ளிட்ட நான்கு போலீசார், அன்று இரவே உத்திரவாகினிப்பேட்டையைச் சேர்ந்த முத்துசாமி மகன் முல்லை வளவனை கைது செய்து, ஸ்டேஷனுக்கு அழைத்து சென்று விசாரித்தனர். அதில், ராமு கொலை செய்ததை ஒப்புக் கொண்டார்.பின்னர் நடத்திய சோதனையில், அவருக்கு கொரோனா தொற்று உறுதியானதால், அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.கொலை வழக்கு குற்றவாளிக்கு கொரோனா உறுதியானதால், அவரை கைது செய்த சப் இன்ஸ்பெக்டர் உள்ளிட்ட நான்கு போலீசார், தனிமைப்படுத்திக் கொள்ள அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர்.நேற்று காலை பஞ்சாயத்து ஊழியர்கள், வில்லியனுார் போலீஸ் ஸ்டேஷன் முழுதும் கிருமிநாசினி தெளித்து சுத்தம் செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X