இந்தியா

பாசிக், பாப்ஸ்கோ நிறுவன ஊழியர்கள் வயிற்றில் ஈரத் துணி கட்டி போராட்டம்

Added : செப் 13, 2020
Share
Advertisement

புதுச்சேரி; பாசிக், பாப்ஸ்கோ ஊழியர்கள் வயிற்றில் ஈரத் துணியை கட்டிக் கொண்டு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பாசிக், பாப்ஸ்கோ நிறுவனங்களை தொடர்ந்து நடத்த வேண்டும், பாசிக் நிறுவனத்தில் 70 மாத சம்பளம், பாப்ஸ்கோ நிறுவனத்தில் 35 மாத நிலுவை சம்பளத்தை வழங்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி இரண்டு நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்கள் தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.சட்டசபை அருகே, மூன்றாவது நாளாக நேற்று நடந்த காத்திருப்பு போராட்டத்தில் பங்கேற்ற ஊழியர்கள் தங்களது வயிற்றில் ஈரத் துணியைக் கட்டி கொண்டு கோஷங்களை எழுப்பினர்.போராட்டத்துக்கு பாசிக் ஊழியர் சங்க தலைவர் ரமேஷ், செயலர் முத்துராமன், பாப்ஸ்கோ ஊழியர் சங்க தலைவர் ராஜி, செயலர் மாரியப்பன் தலைமை தாங்கினர்.விவசாய சங்க தலைவர் கீதநாதன் வாழ்த்தி பேசினார். ஏ.ஐ.டி.யூ.சி., செயல் தலைவர் அபிஷேகம், பொதுச் செயலர் சேது செல்வம் கண்டன உரையாற்றினர். சண்டே மார்க்கெட் சங்க செயலர் துரை செல்வம், சுமைதுாக்குவோர் சங்க தலைவர் முருகன் உள்ளிட்டோர் வாழ்த்தி பேசினர்.ஏ.ஐ.டி.யூ.சி., பொதுச் செயலாளர் சேது செல்வம் கூறும்போது, 'பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்வதாகவும், போராட்டத்தை கைவிடுமாறு வருவாய், போலீஸ் அதிகாரிகள் கேட்டுக் கொண்டனர். பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு சமூக முடிவு ஏற்பட்டால் மட்டுமே போராட்டத்தை கைவிடு வோம். அதுவரை போராட்டம் தொடரும். ஊழியர்களின் நலனை காப்பதற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X