பசுமாட்டை கொன்ற புலி மசினகுடியில் மீண்டும் பீதி

Added : செப் 13, 2020
Share
Advertisement

கூடலுார்:மசினகுடி அருகே, பசுமாட்டை புலி தாக்கி கொன்றதால், அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர்.நீலகிரி மாவட்டம், மசினகுடி, குரும்பர் பாடியை சேர்ந்த நீலா, தன் பசு மாட்டை சிங்காரா வனப்பகுதியில், நேற்று முன்தினம் மேய்ச்சலுக்கு விட்டுள்ளார். மாடு வீட்டுக்கு வராததால் தேடி சென்றுள்ளனர். அங்கு புலி தாக்கி, பசு பலியானது தெரிய வந்தது. இதனால், பழங்குடி மக்கள் அச்சமடைந்துள்ளனர்.மக்கள் கூறுகையில், ' இதே பகுதியில், இரு வாரங்களுக்கு முன், புலி தாக்கி பழங்குடி பெண் உயிரிழந்தார். சம்பவம் நடந்த இடத்தில் இருந்து, சிறிது துாரத்தில் புலி தாக்கி, பசு மாடு இறந்துள்ளது. புலி தாக்கி இதுவரை ஐந்து மாடுகள் இறந்துள்ளன. பெண்ணை தாக்கிய புலிதான் இந்த மாடுகளையும் தாக்கி இருக்க வாய்ப்புள்ளது. புலியிடமிருந்து பாதுகாப்பு வழங்க வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றனர்.வனத்துறையினர் கூறுகையில்,' இப்பகுதியில், கேமரா வைத்து கண்காணிக்கப்படுகிறது. மக்கள் இந்த பகுதியில் கால்நடைகளை மேய்ச்சலுக்கு விடுவதை தவிர்க்க வேண்டும்' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X