பொது செய்தி

தமிழ்நாடு

கொரோனாவுக்கு அதிக கட்டணம்;மருத்துவமனைகளில் சோதனை

Added : செப் 13, 2020
Share
Advertisement

கோவை:கொரோனா சிகிச்சைக்கு அதிக கட்டணம் வசூலிப்பதாக வந்த புகாரை தொடர்ந்து, கோவை தனியார் மருத்துவமனைகளில் சுகாதாரத் துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர்.கோவையில் உள்ள சில தனியார் மருத்துவமனைகளில், கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெறும் நோயாளிகளிடம், அரசு நிர்ணயித்த கட்டணத்தை விட, கூடுதலாக வசூலிப்பதாகவும், நோயாளிகளுக்கு சரியான ஊட்டச்சத்து உணவு வழங்கப்படுவதில்லை என்றும் சுகாதாரத் துறைக்கு புகார் வந்தது.சுகாதாரத் துறை இணை இயக்குனர் கிருஷ்ணா, தனியார் மருத்துவமனைகளில் நேற்றிரவு அதிரடி ஆய்வு மேற்கொண்டார். அப்போது, சில தனியார் மருத்துவமனைகளில் அரசு நிர்ணயித்த கட்டணத்தை விட கூடுதலாக வசூலிப்பது கண்டறியப்பட்டது. அந்த மருத்துவமனைகளுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார்.'கொரோனா சிகிச்சைக்கு அதிக கட்டணம் வசூலிக்கும் மருத்துவமனைகளின் உரிமம் ரத்து செய்யப்படும். தொற்று அதிகரித்து வரும் நிலையில், தனியார் மருத்துவமனைகள் பொறுப்புணர்வோடு பணியாற்றுவதோடு, அரசுக்கு ஒத்துழைக்க வேண்டும்' என, கேட்டுக்கொண்டார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X