கொரோனாவுக்கு எந்த வகை மருத்துவத்தில் சிகிச்சை எடுத்தாலும் அவர்களை மனரீதியாகவும் உடல்ரீதியாகவும் மீண்டெழுவதற்கு உதவுகிறது யோகா.
தொற்று நோய் மற்றும் தொற்றா நோய்களை யோகா குணப்படுத்துவது பல்வேறு அறிவியல் சார்ந்த பரிசோதனைகள் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது. யோகக்கலையின் அடிப்படையில், உடல், பிரணாமம், மனம், அறிவு, ஆனந்தம் எனும் ஐந்து நிலைகளை கொண்டுள்ளது மனித வாழ்க்கை. இவை அனைத்தையும் துாய்மை செய்வதற்குரிய வழிமுறைகளும் பல இருக்கின்றன.உடல்நிலைக்கு ஆசனங்கம் (postures), பிரணாம நிலைக்கு மூச்சுப்பயிற்சி, மனநிலைக்கு தியானம் (Meditation), பஜனை, அறிவுநிலைக்கு உரைகள் (Lectures), நிதித்யாசனா (Looking inwards), ஆனந்த நிலைக்கு தளர்வான நிலை மற்றும் ஆனந்த நிலையில் இருத்தல் ஆகியவை துாய்மைக் கருவிகளாக பயன்படுகின்றன.
யோகா எப்படி வேலை செய்கிறது?
உடல்நிலையில், யோகா நரம்பியல் மண்டலத்தை ஓய்வு எடுக்கச்செய்கிறது. அப்போது நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது. ரத்தத்தில் உள்ள அழுத்தப்பட்ட ஹார்மோன் நிலையை குறைக்கிறது. சைட்டோகைன்களில் உள்ள சார்பு அழற்சியை குறைக்கிறது. ஆன்ட்டி ஆக்சிடென்ட் உற்பத்தியை அதிகரிக்கச் செய்கிறது. நல்ல துாக்கத்தை வழங்குகிறது.மூளையின் செயல்பாட்டை அதிகரிப்பதுடன் மூளை நரம்புகளை வலுவடையச் செய்கிறது. இருதய செயல்பாடுகளை துாண்டுவதுடன் ரத்த அழுத்தம், சர்க்கரை அளவை கட்டுப்படுத்துகிறது. மனஅழுத்தம் இல்லா தினசரி வாழ்வை நமக்கு உறுதிபடுத்துகிறது. பிராணாயாமம் செய்வதால், நுரையீரல் மற்றும் மூச்சு தொடர்பான பிரச்னைகளுக்கு தீர்வு கிடைக்கிறது.தடாசானா, கட்டி சக்ராசனா, அர்த்த கட்டி சக்ராசனா, திரிகோனாசனா, வஜ்ராசனா, உத்ராசனா உள்ளிட்ட ஆசனங்களால் நோயாளிகளுக்கு தீர்வு கிடைக்கிறது. உடலின் உள்புறத்தை தொடர்ந்து அமைதியான நிலையில் வைப்பதுடன், உடலை ஆரோக்கியமாகவும் வைக்க உதவுகிறது.
ஆக...யோகா...ஆரோக்கியத்திற்குஆஹா!'
ஆக்சிஜன் செறிவு அதிகரிக்கும்!'
''தியானத்தால் கொரோனா நோயாளிகளின் ரத்தத்தில் ஆக்ஸிஜன் செறிவூட்டல் அதிகரித்துள்ளது. வென்டிலேட்டர், பைபாப் இயந்திரங்களால் செயற்கை சுவாசம் பெற்ற பல நோயாளிகள் விரைந்து குணமடைந்துள்ளனர். ஜலநிதி என்ற முறை மூலம் சுவாசப்பகுதிகளை உப்பு நீரால் கழுவும்போது மூச்சு விடுவதில் இருந்த சிரமம் நீங்கியது. நோயாளிகள் விரைந்து குணமடைய இம்முறைகள் பெரிதும் உதவின. நோயாளிகள் ஒரு வாரத்துக்குள் முற்றிலும் குணமடைய முடிகிறது!''
-டாக்டர் ராகவேந்திரசாமி,
உதவி மருத்துவ அலுவலர்
(யோகா மற்றும் நேச்சுரோபதி),
அரசு தலைமை மருத்துவமனை, உடுமலை.
தொடர்பு எண்: 93606 27648
இ-மெயில் : ragavendrasamy.b@gmail.com
நோய் எதிர்ப்பு சக்தி பானம்!
இயற்கை நல மருத்துவ முறையில் நோய்எதிர்ப்பு சக்தி பானம் தயாரிக்கும் முறை:
தண்ணீர், 250 மில்லி, இஞ்சி ஒரு துண்டு, மிளகு அரை டீஸ்பூன், மஞ்சள் துாள் ஒரு சிட்டிகை, நாட்டு சர்க்கரை ஒரு டீஸ்பூன், எலுமிச்சை அரை பழம்.
செய்முறை:மிளகு, இஞ்சி இரண்டையும் தனித்தனியாக இடித்து வைத்து கொள்ளவும். தண்ணீர் கொதித்தவுடன், மிளகு துாள், மஞ்சள் துாள், இஞ்சி ஆகியவற்றை போட்டு, மூன்று நிமிடம் கொதிக்க விட்டு இறக்கவும். இறக்கிய பிறகு, சூடு ஆறியவுடன் எலுமிச்சம் பழத்தை பிழிந்து வடிகட்டி குடிக்கலாம். உடலில் நோய் எதிர்ப்பு சக்தி உருவாகும். ஜீரண சக்தி நன்றாக இருக்கும்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE