சென்னை:''பா.ஜ., தேசிய செயலர் எச்.ராஜாவை விட, ஹிந்து மதத்திற்கும், கோவில்களுக்கும் அதிக பணிகளை செய்துள்ளேன்,'' என, தி.மு.க., ஐ.டி., அணி மாநில செயலர், பி.டி.ஆர்.பி.தியாகராஜன் எம்.எல்.ஏ., கூறினார்.

சென்னையில், அவரது பேட்டி:தமிழகத்தில், ஹிந்து மதவழிபாட்டு தலங்கள் அதிகமாக உள்ளன. இங்கு, ஹிந்து மதத்தை வைத்து அரசியல் செய்வது தவறு. எச்.ராஜா, நாராயணன் திருப்பதி, கே.டி.ராகவன் போன்றவர்களை விட, கோவில்களுக்கும், ஹிந்து மதத்திற்கும் அதிக பணிகளை செய்துள்ளேன்.அவர்கள் ஏதோ, ஹிந்து காவலாளி போல பேசி வருகின்றனர். அரசியல் மக்களுக்காக செய்கிறோம்; மதத்தையும், அரசியலையும் கலக்கக் கூடாது.

சமூக வலைதளங்கள், இணையதளம் பயன்படுத்துவதில், தமிழகம் முதலிடம் வகிக்கிறது. ஆனால், பல மடங்கு சக்தி உள்ள, ஐ.டி.,விங் உடைய பா.ஜ., வினர், மனித நேயமற்ற வதந்திகளை பரப்புகின்றனர். அதனால் தான், தமிழகத்தில், பா.ஜ.,வுக்கு நோட்டாவை விட குறைவான ஓட்டுக்கள் கிடைக்கின்றன.இவ்வாறு, தியாகராஜன் கூறினார்.
Advertisement