புதுடில்லி: மத்திய உள்த்துறை அமைச்சர் அமித் ஷா மருத்துவ பரிசோதனைக்காக சனிக்கிழமை மாலை ( செப்.,12) டில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அமித்ஷாவிற்கு கடந்த ஆக., 2ம் தேதி கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து மருத்துவமனையில் சிகிச்சை எடுத்துவந்த நிலையில் ஆக., 14ல் அவர் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தார். மீண்டும் ஆக., 18 ம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
ஏற்கனவே தனது டுவிட்டர் பதிவில் கொரோனா பாதித்த தன்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் தங்களை தனிமைப்படுத்தும் படி கேட்டுக் கொண்டிருந்தார். இந்நிலையில் நேற்று சனிக்கிழமை மாலை மீண்டும் டில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்
.
