எம்.பி.பி.எஸ்., பி.டி. எஸ். ஆகிய மருத்துவ படிப்புகளில் மாணவர்களை சேர்ப்பதற் கான 'நீட்' எனப்படும் தேசிய தகுதி நுழைவுத் தேர்வு இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறுகிறது.

நீட் தேர்வு அச்சம் காரணமாக மதுரை மாணவி ஜோதி துர்கா, தருமபுரி மாணவர் ஆதித்யா ஆகிய மாணவர்கள் தற்கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், மற்றொரு மாணவர் தற்கொலை செய்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு மலை சுற்றி ரோடு இடையன் பரப்பு பகுதியை சேர்ந்த எலக்ட்ரிக் கடை உரிமையாளர் முருகேசன் என்பவரின் மகன் மோதிலால் (21) என்பவர் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார்.

மோதிலால் மூன்றாவது முறையாக நீட் தேர்வு எழுத உள்ளார். இன்று தேர்வு நடக்க உள்ள நிலையில், தேர்வு பயத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
தமிழகத்தில் நீட் தேர்வினால் ஒரே நாளில் 3 மாணவர்கள் தற்கொலை செய்து உள்ள சம்பவம் பெற்றோர்களிடையே கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE