பராமரிப்பு இல்லாத பென்னிகுவிக் மணிமண்டபம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

பராமரிப்பு இல்லாத பென்னிகுவிக் மணிமண்டபம்

Added : செப் 13, 2020
Share

கூடலுார் : லோயர்கேம்ப் பென்னிகுவிக் மணிமண்டபம் பராமரிக்கப்படாமல் கரையான் பிடித்து சேதமடையும் நிலையில் உள்ளது.

பெரியாறு அணையைக் கட்டிய லண்டன் பொறியாளர் பென்னிகுவிக்கிற்கு தமிழக அரசால் லோயர்கேம்பில் ரூ.1.25 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட மணிமண்டபம் 2013 ஜன. 15ல் திறக்கப்பட்டது. அதன்பின் தமிழகத்தின் பல்வேறு பகுதிகள், கேரளாவில் இருந்தும் சுற்றுலா பயணிகள் அதிகம் வந்தனர்.கொரோனா தடுப்பு நடவடிக்கையாக 6 மாதங்களாக மூடப்பட்டது. எனினும் மணிமண்டபம் பொதுப்பணித்துறையினரால் பராமரிக்கப்படவில்லை. இதன் காரணமாக பென்னிகுவிக் சிலைக்கு அருகில் காட்சிப்படுத்தி வைக்கப்பட்டிருந்த பெரியாறு அணை கட்டுமானப்பணிகள் குறித்த புகைப்படங்கள், கதவுகள் ஆகியவற்றில் கரையான் பிடித்து சேதமடைந்துள்ளன.

மேலும் மணிமண்டபத்தைச் சுற்றிலும் வைக்கப்பட்டிருந்த புல்வெளிகள் முட்புதர்களாக மாறியுள்ளன. சுற்றுலாதலங்கள், கோயில்கள் திறக்கப்பட்டுள்ள நிலையில் மணி மண்டபத்தையும் சீரமைத்து பயன்பாட்டிற்கு வர விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X