பொது செய்தி

தமிழ்நாடு

செய்திகள் சில வரிகளில்

Added : செப் 13, 2020
Share
Advertisement
சொத்துவரி செலுத்த வேண்டுகோள்கம்பம்: கொரோனா காரணமாக சொத்து வரி செலுத்த அரசு கால அவகாசம் வழங்கியது. இந்நிலையில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு மக்கள் இயல்வு வாழ்க்கைக்கு திரும்புகின்றனர். எனவே கம்பத்தில் சொத்துவரி, தொழில்வரி, குடிநீர் கட்டணம், குத்தகை பாக்கி, வாடகை பாக்கி செலுத்தாதவர்கள் உடனே நகராட்சி வரி வசூல் மையங்களிலும் அல்லது இணையவழி மூலமும் அதனைசெலுத்த வேண்டும்

சொத்துவரி செலுத்த வேண்டுகோள்கம்பம்: கொரோனா காரணமாக சொத்து வரி செலுத்த அரசு கால அவகாசம் வழங்கியது. இந்நிலையில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு மக்கள் இயல்வு வாழ்க்கைக்கு திரும்புகின்றனர். எனவே கம்பத்தில் சொத்துவரி, தொழில்வரி, குடிநீர் கட்டணம், குத்தகை பாக்கி, வாடகை பாக்கி செலுத்தாதவர்கள் உடனே நகராட்சி வரி வசூல் மையங்களிலும் அல்லது இணையவழி மூலமும் அதனைசெலுத்த வேண்டும் என கமிஷனர் (பொ) செல்வராணி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

குப்பைக்கிடங்கான கிணறு கம்பம்: சுருளிப்பட்டியில் பயன்படாத கிணற்றை குப்பைக்கிடங்காக மாற்றி விட்டனர். சேகரமாகும் குப்பையை அதில் போட்டு தீ வைத்து எரிக்கவும் செய்கின்றனர். புகையால் சுற்றுப்பகுதி குடியிருப்போருக்கு சுவாச பிரச்னை ஏற்படுகிறது. 'இடமில்லாததால் வேறுவழியின்றி கொட்டுகிறோம். தீ வைத்து எரிப்பதை நிறுத்திவிடுகிறோம்,' என ஊராட்சி தரப்பில் பதில் தெரிவிக்கப்பட்டது. விரைவில் மாற்றும் இடம் தேர்வு செய்ய உயரதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

நிர்வாகிகள் நியமனம்போடி: பா.ஜ., கல்வியாளர் பிரிவு தேனி மாவட்ட தலைவராக லட்சுமிவாசன், செயலாளர்களாக முருகன், சுப்ரமணி ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.பயனற்ற சுகாதார வளாகம்போடி: இங்கு தாலுகா அலுவலக வளாகத்தில் மக்கள் பயன்பாட்டிற்காக இருபாலருக்கும் ரூ. பல லட்சம் செலவில் சுகாதாரவளாகம் கட்டப்பட்டது. ஆனால் முறையான பராமரிப்பு இல்லாமல் கோப்பைகள் முழுவதும் உடைந்து செடிகளால் ஆக்கிரமித்துள்ளன. அங்கு செல்ல தயக்கம் காட்டுகின்றனர். சீரமைத்து பயன்பாட்டிற்கு கொண்டுவர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X