சம்பவம் செய்தி

தமிழ்நாடு

தேனி வாரச்சந்தை துவக்கம் விதிமீறலுக்கு அபராதம்

Added : செப் 13, 2020
Share
Advertisement

தேனி : தேனி வாரச்சந்தை நேற்றுமுதல் செயல்படத்துவங்கியது. கொரோனா தடுப்பு விதிமீறலுக்காக ரூ.6400 அபராதம் விதிக்கப்பட்டது.

கொரோனா பரவல் காரணமாக மார்ச் இறுதி வாரத்தில் தேனி வாரச்சந்தை மூடப்பப்பட்டது. ஊரடங்கில் தளர்வால் நேற்று 100 கடைகளுடன் மீண்டும் திறக்கப்பட்டது. காலை 10:30 மணி முதல் மதியம் 1:00 மணி வரை கடைகளில் பொதுமக்கள் பொருட்களை வாங்கிச் சென்றனர். நகராட்சி சுகாதார அலுவலர் அறிவுச்செல்வம் மேற்பார்வையில் சுகாதார ஆய்வாளர்கள் மாரிமுத்து, பாலமுருகன் முன்னிலையில் துாய்மை இந்தியா திட்ட மேற்பார்வையாளர் சிவக்குமார், சந்தைக்கு வந்த பொது மக்களுக்கு கிருமி நாசினி கொடுத்தார்.

முகக்கவசம் அணியாமல் வந்த ஏழு பேருக்கு தலா ரூ.200 வீதம் ரூ.1400ம், சமூக இடைவெளி கடைப்பிடிக்காமல் இருந்த வணிக நிறுவன உரிமையாளருக்கு ரூ.5 ஆயிரம் என மொத்தம் ரூ.6400 அபராதம் விதித்து வசூலிக்கப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X