கொரோனா இறப்பை பூஜ்ஜியமாக்கிய கனடா - 6 மாதத்தில் இதுவே முதல் முறை!

Updated : செப் 13, 2020 | Added : செப் 13, 2020 | கருத்துகள் (3)
Share
Advertisement

ஒட்டாவா: கனடாவில் கடந்த இரண்டு வாரமாக ஒற்றை இலக்கத்தில் பதிவாகி வந்த கொரோனா இறப்பு எண்ணிக்கை, செப்டம்பர் 11 அன்று இதுவரை இல்லாத வகையில் பூஜ்ஜியமாக பதிவாகியுள்ளது.latest tamil newsவட அமெரிக்க நாடான கனடாவின் மக்கள் தொகை 3.7 கோடி ஆகும். அங்கு இதுவரை 1.35 லட்சம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 1.2 லட்சம் பேர் குணமடைந்து உள்ளனர். இதுவரை இறந்தவர்கள் எண்ணிக்கை 9,163 ஆக உள்ளது. இந்தநிலையில் 6 மாதத்திற்கு பின்னர் முதல் முறையாக அங்கு கொரோனா இறப்பு எதுவும் இல்லாத நாளாக நேற்று இருந்துள்ளது. இச்சாதனையை மருத்துவர்கள், சுகாதார பணியாளர்கள் கொண்டாடினர். கொரோனா தொற்று ஏற்பட்ட பின்னர் மார்ச் 15 அன்று கனடாவில் இறப்பு எதுவும் இல்லாத நாளாக இருந்தது. 6 மாத இடைவெளிக்கு பின்னர் தற்போது தான் அது மீண்டும் ஏற்பட்டுள்ளது.


latest tamil newsஆக., இறுதி வாரத்திலிருந்தே கனடாவில் இறப்பு எண்ணிக்கை தினசரி ஒற்றை இலக்கமாகவே தொடர்ந்து வந்தது குறிபிடத்தக்கது. இறப்பு விகிதம் குறைந்துள்ள போதும் கனடாவின் பெரிய மாகாணங்களான க்யூபெக் மற்றும் ஒன்டாரியோவில் தொற்று பாதிப்பு அதிகரித்தபடியே உள்ளது.

நாட்டின் மொத்த பாதிப்பில் 80% இந்த இரு மாகாணங்களில் இருந்து தான் பதிவாகியுள்ளது. எனவே அந்த மாகாணங்களில் இன்னமும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் முழுமையாக தளர்த்தப்படாமல் உள்ளன. உள்ளூர் நிகழ்சிகளுக்கு 50 பேர் வரையும், வெளி நிகழ்ச்சிகளுக்கு 100 பேர் மட்டுமே அனுமதிக்கப்படுகின்றனர்.

Advertisement
வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Raj - nellai,இந்தியா
13-செப்-202019:36:54 IST Report Abuse
Raj மோடியிடம் இதை சொல்லவும்
Rate this:
Cancel
Vijay D Ratnam - Chennai,இந்தியா
13-செப்-202013:50:58 IST Report Abuse
Vijay D Ratnam உடனே கனடாவை பார்த்திங்களா என்று சில உதார் பேர்வழிகள் இந்தியாவோடு கம்பேர் பண்ணிக்கிட்டு பெனாத்த தொடங்கிடுவாய்ங்க. உலகின் மிகப்பெரிய அகதி முகாம் கனடாவின் பரப்பளவு ஒரு கோடி சதுரகிலோமீட்டர். மக்கட்தொகை வெறும் நான்கு கோடி மட்டுமே. ஆனால் 33 லட்சம் சதுரகிலோமீட்டர் கொண்ட நம் இந்தியா பரப்பளவில் கனடாவில் மூன்றில் ஒரு பங்கு கூட கிடையாது. மக்கட்தொகை 34 மடங்கு அதிகம்.ரெண்டு மூணு சிட்டி தவிர அங்கு சமூக இடைவெளி என்பது ஒரு மேட்டரே அல்ல. நாம அப்படியா.
Rate this:
Cancel
venkatan - Puducherry,இந்தியா
13-செப்-202009:09:22 IST Report Abuse
venkatan Atleast implement complete shut down on Saturdays and Sundays in India. Immunizations are not giving promising results so far.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X