பொது செய்தி

இந்தியா

மனித கழிவை மனிதர்கள் அகற்ற தடை சட்டத்தை கடுமையாக்க புதிய மசோதா

Updated : செப் 13, 2020 | Added : செப் 13, 2020 | கருத்துகள் (10)
Share
Advertisement

புதுடில்லி:பார்லிமென்டில், துவங்க இருக்கும் கூட்டத்தொடரில், மனித கழிவுகளை, மனிதர்களே அகற்றும் முறைக்கு தடை விதிக்கும் சட்டத்தை, மேலும் கடுமையாக்கும் மசோதா, தாக்கல் செய்யப்பட உள்ளது.



latest tamil news



வைரஸ் அச்சுறுத்தலுக்கு மத்தியில், பார்லிமென்டில், நாளை மழைக்கால கூட்டத்தொடர் துவங்கவுள்ளது. அவை நடவடிக்கைகளில் பங்கேற்கும் எம்.பி.,க்களுக்கும், இதர அதிகாரிகளுக்கும், பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இந்த கூட்டத்தொடரில், 23 மசோதாக்களை தாக்கல் செய்து நிறைவேற்ற, மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதில், கழிவு நீர் தொட்டிக்குள் இறங்கி, மனித கழிவுகளை, மனிதர்களே அகற்றும் முறைக்கு தடை விதிக்கும் சட்டத்தை, மேலும் கடுமையாக்கும் சட்ட திருத்த மசோதா, தாக் கல் செய்யப்பட்டுள்ளது.

இந்த முறையை இயந்திரமயமாக்கவும், அந்த பணியின்போது நேரும் விபத்துகளில், தொழிலாளர்கள் உயிரிழக்க நேர்ந்தால், அவர்களின் குடும்பத்தினருக்கு இழப்பீடு வழங்கவும், இந்த சட்ட திருத்த மசோதா வழிவகுக்கிறது.அபராதம் தற்போது உள்ள சட்டத்தின்படி, தனிநபரோ அல்லது ஒரு நிறுவனமோ, கழிவு நீர் தொட்டிகளை சுத்தம் செய்ய, தொழிலாளர்களை அழைத்து வேலை வாங்கினால், அவர்களுக்கு, ஐந்து ஆண்டுகள் வரை சிறை தண்டனையும், 5 லட்சம் ரூபாய் வரை அபராதமும் கிடைக்கும்.


latest tamil news



இந்த சட்டத்திருத்த மசோதா மூலம், சிறை தண்டனையின் ஆண்டுகளை அதிகரித்து, அபராதத் தொகையை உயர்த்தவும் முடிவு செய்யப்பட்டுஉள்ளது.நாட்டில், கழிவு நீர் தொட்டிகளில் இறங்கி சுத்தம் செய்யும் தொழிலாளர்களின் உயிரிழப்புகள், தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஆகையால், இதை கருத்தில் கொண்டு, சட்டத்தை மேலும் கடுமையாக்க முடிவு செய்யப்பட்டதாக, மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (10)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
S.Baliah Seer - Chennai,இந்தியா
13-செப்-202019:03:50 IST Report Abuse
S.Baliah Seer ஏன் அருந்ததியர் சங்கம் இதை எதிர்க்கவில்லை? பெரும்பாலும் அம்மக்கள்தானே இந்த தொழிலை செய்கிறார்கள்.சட்டத்தால் இதை தடை செய்ய முடியாது.
Rate this:
Cancel
Indian Ravichandran - Chennai,இந்தியா
13-செப்-202017:34:43 IST Report Abuse
Indian  Ravichandran சட்டம் எல்லாம் சரிதான் முதலில் கழிவுகளை அகற்றும் நவீன இயந்திரங்கள் எளிதில் வாடகைக்கு கிடைக்கும் வசதி முதலில் கொண்டுவாருங்கள், ஒரு இயந்திரத்தை கூட ரோட்டில் பார்க்கமுடியவில்லை, கழிவு நீர் எடுக்கும் இயந்திரம் வேறு கழிவுகளை அகற்றும் இயந்திரம் வேறு. பெரிய நகரங்களில் பல திட்டத்தின் மூலம் நிறைய இயந்திரம் வாங்கியதாக கணக்கை கட்டிவிட்டு கார்ப்பரேஷன் வழக்கம் போல ஆட்டைய போட்டுவிட்டார்கள் முதலில் அதை பாருங்கள் அப்புறம் எப்படி அகற்றவேண்டும் என்ற விதிமுறைகள் சாதாரண பொதுமக்களுக்கு புரியும்படி சொல்லிக்கொடுங்கள்.
Rate this:
Cancel
13-செப்-202015:05:39 IST Report Abuse
Jeevan Talkies https://youtu.be/uYFVdtBEQ3oமனிதக்கழிவுகளை மனிதனே அள்ளும் அவலத்தை விளக்கும் ஒரு குறும்படம் இந்த சமூகத்திற்கு இது ஒரு பாடம்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X