பொது செய்தி

தமிழ்நாடு

12 ராசிகளுக்கான இந்த வார பலனும் பரிகாரமும்!

Updated : செப் 13, 2020 | Added : செப் 13, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement
ராசி, வாரபலன், பரிகாரம்

திங்கள் முதல் ஞாயிறு வரை(14.9.2020 - 20.9.2020 ) இந்த வாரம் எந்த ராசிக்கு என்ன பலன். உங்கள் ராசிக்கான பலனும் இந்த வாரம் செய்ய வேண்டிய பரிகாரமும் காணுங்கள்.


மேஷம்


சந்திரன், சூரியன், செவ்வாய் சாதக நிலையில் உள்ளனர். பெருமாள் வழிபாடு நல்வாழ்வு தரும்.
அசுவினி: குடும்பத்தினருடன் சுபநிகழ்ச்சிகளில் நேரடியாகவோ, அலைபேசி மூலமோ கலந்து கொள்வீர்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். வேலையாட்களை தட்டிக் கொடுத்து வேலை வாங்குவீர்கள்.

பரணி: குடும்பத்தின் தேவைகளை மேம்படுத்துவீர். வேண்டுதலை நிறைவேற்றுவீர்கள். புதுமை படைக்கும் வாரம். புது ஏஜென்சி எடுப்பீர்கள். கலைஞர்கள் பிறரின் ரசனையை புரிந்து கொள்வர். பணியாளர்கள் சூட்சுமங்களை உணர்வீர்கள்.

கார்த்திகை 1: அலுவலகத்தில் எதிரிகளின் ராஜ தந்திரத்தை உடைத்து எறிவீர்கள். சீரான அணுகுமுறையால் சாதனை செய்வீர்கள். சிக்கனமாக இருக்க வேண்டுமென்று தீர்மானிப்பீர்கள்.


ரிஷபம்


latest tamil news


புதன், சூரியன், சந்திரனால் நன்மை ஏற்படும். துர்கை வழிபாடு தைரியம் வளர்க்கும்.

கார்த்திகை 2,3,4: குடும்பத்தின் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவீர்கள். பெண்கள் வேண்டுதல்களை நிறைவேற்றுவர். சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் ரசனைகளை புரிந்து கொள்வீர்கள்.

ரோகிணி: புதுமை படைக்கும் வாரம். சில யுக்திகளை அறிந்து கொள்வீர்கள். பால்ய நண்பர்கள் உதவுவார்கள். வெளியூர் பயணங்களால் அலைச்சல் இருந்தாலும் ஆதாயம் உண்டு. புது வேலை அமையும்.

மிருகசீரிடம் 1,2: வெளிவட்டாரத் தொடர்புகள் அதிகரிக்கும். வியாபாரத்தில் வரவு சிறிது உயரும். பணியாளர்களுக்குத் திருப்திகரமான சூழ்நிலை உருவாகும். உழைப்பால் முன்னேற்றம் காண்பீர்கள்.


மிதுனம்


செவ்வாய், புதன், சுக்கிரன் தாராள நன்மைகளை வழங்குவர். அம்மன் வழிபாடு மங்கலம் தரும்.

மிருகசீரிடம் 3,4: குடும்பத்தில் வாக்குவாதங்கள், மன உளைச்சல் இருக்கும். சூழ்நிலை அறிந்து விட்டுக் கொடுத்தால் பிரச்னைகள் நீங்கும். வேலை சம்மந்தமாக அலைச்சல், அதிருப்பதி வந்து நீங்கும்.

திருவாதிரை: உங்கள் பேச்சில் அனுபவ அறிவு வெளிப்படும். உடன்பிறந்தவர்கள் உறுதுணையாக இருப்பார்கள். விருந்தினர்களின் வருகையால் வீடு களைகட்டும்.

புனர்பூசம் 1,2,3: வியாபாரத்தில் புதிய சரக்குகளை கொள்முதல் செய்வீர்கள். பணியிடத்தில் மேலதிகாரிகள் சில நுணுக்கங்களை சொல்லித் தருவார்கள். தைரியமாக முடிவுகள் எடுப்பீர்கள்.


கடகம்


செவ்வாய், ராகு, சந்திரன் அனுகூல பலனை தருவர். குலதெய்வ வழிபாடு துன்பம் போக்கும்.
புனர்பூசம் 4: குழந்தை பாக்கியம் எதிர்பார்த்தவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி உண்டு. கடனாகக் கொடுத்த தொகை கைக்கு வரும். தாயாருக்கு சிறு மருத்துவ செலவுகள் ஏற்படும்.

பூசம்: பெண்களுக்கு தோழிகளால் சில வருத்தங்கள் உண்டாகும். சோர்வு நீங்கி துடிப்புடன் செயல்படத் தொடங்குவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் எதிர்பாராத லாபம் உண்டு.
ஆயில்யம்: மனைவியிடம் மனம் விட்டு பேசுவீர்கள். புது முடிவுகள் எடுப்பீர்கள். விரும்பிய பொருட்களை வாங்குவீர்கள். சுபநிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். வியாபாரத்தில் தள்ளிப் போன ஒப்பந்தம் கையெழுத்தாகும்.


சிம்மம்


புதன், குரு, செவ்வாய் அதிர்ஷ்டகர பலன்களை தருவர். சனீஸ்வரர் வழிபாடு சங்கடம் தீர்க்கும்.
மகம்: சகபணியாளர்களுடைய ஆதரவால் நிலுவைப் பணிகளை முடிப்பீர்கள். மனசாட்சி படி செயல்படுவீர்கள். வாகன யோகம் உண்டு. சுபச்செலவுகள் ஏற்படும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.
பூரம்: வெள்ளி பொருட்கள் வாங்குவீர்கள். வியாபாரிகளுக்கு பண வரவு திருப்தி தரும். தம்பதி இடையே விட்டுக் கொடுத்து செல்ல வேண்டும். பிள்ளைகளால் செலவு அதிகரிக்கும்.
உத்திரம் 1: பெற்றோரின் உடல் நிலை மேம்படும். மாணவர்கள் படிப்பில் கவனமாக இருக்க வேண்டும். வியாபாரம் முன்னேற்றம் தரும். வயிறு சம்பந்தமான உடல் உபாதைகள் குறையும். பணியாளர்களின் நிலை உயரும்.


கன்னி



புதன், சுக்கிரன், சந்திரன் அனுகூல அமர்வில் உள்ளனர். தன்வந்திரி வழிபாடு தொழிலில் உயர்வு தரும்.
உத்திரம் 2,3,4: புதிய முதலீடுகளை ஆராய்ந்து செய்யவும். நண்பர்களிடம் விட்டு கொடுத்து செல்லுங்கள். உறவினர்கள் வருகை மகிழ்ச்சி தரும். உடன்பிறந்தோரால் ஆதாயம் உண்டு. கொடுக்கல், வாங்கலில் கவனம் தேவை.
அஸ்தம்: பூர்வ சொத்துக்கள் பற்றி கவனமாக இருங்கள். விடா முயற்சியால் வெற்றிகள் கிடைக்கும். தொழிலில் நிதானமான முன்னேற்றம் காணப்படும். புதிய திட்டங்கள் தாமதமாகும்.
சித்திரை 1,2: குழந்தைகள் உடல் நலனில் கவனம் வேண்டும். புதிய வரவால் கடனை அடைப்பீர்கள். உறவினர் வீட்டு சுபநிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். குடும்பத்தினரிடையே ஒற்றுமை அதிகரிக்கும். .


துலாம்


சந்திரன், சுக்கிரன், சூரியன் கூடுதல் நற்பலன்களை தருவர். முருகன் வழிபாடு நம்பிக்கை வளர்க்கும்.

சித்திரை 3,4: தர்ம செயல்களில் ஈடுபட்டு மகிழ்ச்சி அடைவீர்கள். பயணங்களால் செலவு கூடும். நிலம் சம்பந்தப்பட்ட இனங்களில் முதலீடுகள் செய்வீர்கள். நண்பர்களுடன் மனம் விட்டு பேசி மகிழ்வீர்கள்.

சுவாதி: எதிர்பாராத சந்திப்பு நிகழும். வியாபாரத்தில் அனுபவமிக்க வேலையாட்களை தேடுவீர்கள். உத்தியோகத்தில் உங்கள் கை ஓங்கும். தொட்டது துலங்கும். விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். அரசால் அனுகூலம் உண்டு.

விசாகம் 1,2,3: மனதிற்கு மகிழ்ச்சி தரும் நிகழ்வுகள் நடக்கும். வீடு கட்ட அல்லது புதுப்பிக்க முற்படுவீர்கள். குழந்தை பாக்கியம் பற்றிய கனவு நனவாகும். சகோதர, சகோதரி இடையே ஒற்றுமை அதிகரிக்கும்.


விருச்சிகம்


செவ்வாய், புதன், சுக்கிரன் அனுகூல பலனைத் தருவர். அனுமன் வழிபாடு வெற்றி தரும்.

விசாகம் 4: திருமணத் தடை உள்ளவர்கள் மகிழ்ச்சியான செய்தியை பெறுவர். வேலை தேடுவோருக்கு நல்ல வேலை கிடைக்கும். செயலில் வேகம் கூடும். உறவினர், நண்பர்களால் ஆதாயம் உண்டு.

அனுஷம்: கடனில் ஒரு பகுதி அடையும். பணியாளர்கள் சில பொறுப்புகளை ஏற்க வேண்டிவரும். வியாபாரத்தில் புதிய வாய்ப்புகள் தேடி வரும். பொது வாழ்வில் உங்களின் புகழ் உயரும்.

கேட்டை: நீண்ட கால பிரச்னைகளுக்கு தீர்வு காண்பீர்கள். வாகனத்தை சீர் செய்வீர்கள். எதிலும் அவசர முடிவுகளை தவிர்ப்பது நல்லது. தொழிலில் நல்ல முன்னேற்றம் காணப்படும். எதிர்கால வாழ்வில் நம்பிக்கை பிறக்கும்.


தனுசு



ராகு, கேது, புதன், சந்திரன் தாராள நற்பலனை வழங்குவர். நரசிம்மர் வழிபாடு பயம் போக்கும்.
மூலம்: குடும்பத்தில் கலகலப்பான சூழல் உருவாகும். பிள்ளைகளின் உடல் நலம் மேம்படும். நண்பர்களுக்காக செலவு செய்ய வேண்டியிருக்கும். திடீர் பணவரவினால் மகிழ்ச்சி ஏற்படும்.
பூராடம்: ஆடம்பர பொருட்கள் வாங்கும் எண்ணத்தை தள்ளி வைப்பீர்கள். சிறு சிறு கவலைகள் வந்து செல்லும். நண்பர்கள், உறவினர்கள் உங்களிடம் அதிக உரிமை எடுத்து கொள்வார்கள். தொழிலில் லாபம் மந்தமாக இருக்கும்.
உத்திராடம் 1: எதிர்பார்ப்புகள் தாமதமாகி முடியும். பணியாளர்களுக்கு மகிழ்ச்சி தரும் நிகழ்வுகள் நடைபெறும். இளைஞர்களின் முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும்.
சந்திராஷ்டமம் : 14.9.2020 காலை 6:00 - 15.9.2020 மதியம் 1:06 மணி


மகரம்


செவ்வாய், புதன், சந்திரால் நன்மை கிடைக்கும். சிவன் வழிபாடு சிரமத்தை போக்கும்.
உத்திராடம் 2,3,4: பிள்ளைகளால் மகிழ்ச்சி உண்டாகும். உறவினரால் ஆதாயம் உண்டு. புதியவர்கள் அறிமுகமாவார்கள். தாயார் ஆதரித்து பேசுவார். வியாபாரத்தில் சில நுணுக்கங்களை புரிந்து கொள்வீர்கள்.
திருவோணம்: உங்களது கோரிக்கையை உயரதிகாரிகள் ஏற்பார்கள். பெண்களுக்கு மகிழ்ச்சியான வாரம். யோசித்து பேசுவது நல்லது. உணவு விஷயத்தில் கவனமாக இருக்கவும்.
அவிட்டம் 1,2: பிள்ளைகளிடம் இருந்து நல்ல செய்தி வரும். பெற்றோரின் உடல் நலம் மேம்படும். வாகனத்தில் செல்லும் போது கவனமாக இருங்கள். பேச்சில் நிதானம் தேவை
சந்திராஷ்டமம் : 15.9.2020 மதியம் 1:07 - 17.9.2020 மாலை 4:36 மணி


கும்பம்


சுக்கிரன், புதன், சந்திரனால் அளப்பரிய நன்மை கிடைக்கும். விநாயகர் வழிபாடு வினை தீர்க்கும்.
அவிட்டம் 3,4: முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். நண்பரின் உதவியால் பழைய பிரச்னைக்கு தீர்வு காண்பீர்கள். மனதில் உற்சாகம் அதிகரிக்கும். தாயின் ஆசியை பெறுவீர்கள்.
சதயம்: கடுமையான கால கட்டத்தை தாண்டி வந்து விட்டீர்கள். எதிர்பார்த்த வேலை அமையும். கேட்ட இடத்தில் கடன் கிடைக்கும். வீண் செலவுகளை தவிர்க்கவும். பெண்கள் சற்று கஷ்டப்பட வேண்டியிருக்கும்.
பூரட்டாதி 1,2,3: வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் இருக்கும். புதிய முயற்சிகளில் ஈடுபடவேண்டாம். வெளிநாட்டுத் தொடர்பு மூலம் ஆதாயம் கிடைக்கும். மகன்/ மகளின் விருப்பம் நிறைவேறும்.
சந்திராஷ்டமம் : 17.9.2020 மாலை 4:37 - 19.9.2020 இரவு 7:05 மணி


மீனம்


ராகு, புதன், சுக்கிரன் அதிர்ஷ்டகர பலன்களை வழங்குவர். ராமர் வழிபாடு சுபிட்சம் தரும்.
பூரட்டாதி 4: சாதுார்யமாக பேசி காரியத்தை சாதிப்பீர்கள். சகஊழியர்களை உற்சாகப் படுத்துவீர்கள். வியாபாரிகள் நல்ல வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்வார்கள்.
உத்திரட்டாதி: புதிய தொழில் தொடங்க நல்ல வாரம். எதிரிகளை நினைத்து பயப்பட வேண்டாம். நினைத்த காரியம் நிறைவேறும். கேட்ட இடத்தில் பணம் கிடைக்கும். மூத்த சகோதர, சகோதரிகளால் நன்மை உண்டாகும்.
ரேவதி: உங்களின் செல்வாக்கு அதிகரிக்கும். இளைஞர்களுக்கு நல்ல பெயர் கிடைக்கும். கணவன் மனைவி உறவில் காதல் அதிகரிக்கும். கலைத்துறையினர் நுணுக்கங்களை கற்றுக் கொள்வர்.
சந்திராஷ்டமம் : 19.9.2020 இரவு 7:06 மணி - 20.9.2020 நாள் முழுவதும்

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
sivam - baghram,ஆப்கானிஸ்தான்
13-செப்-202013:32:31 IST Report Abuse
sivam இது என்ன புதுசா இருக்கு?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X