பொது செய்தி

தமிழ்நாடு

நீட் நுழைவுத்தேர்வு நிறைவடைந்தது: தமிழகத்தில் 1.17 லட்சம் மாணவர்கள் தேர்வெழுதினர்

Updated : செப் 13, 2020 | Added : செப் 13, 2020 | கருத்துகள் (15)
Share
Advertisement
நீட், தேர்வு, நீட்தேர்வு, முககவசம்,  முறைகேடு, முன்னேற்பாடு, தீவிரம்

சென்னை:மருத்துவ படிப்புக்கான, 'நீட்' நுழைவு தேர்வு, இன்று நாடு முழுதும் நடந்தது. தமிழகத்தில், 1.17 லட்சம் பேர் தேர்வெழுதினர்.

பிளஸ் 2 முடித்த மாணவர்கள், எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., உள்ளிட்ட மருத்துவ படிப்புகளில் சேருவதற்கு, நீட் நுழைவு தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும்.


3,843 மையங்கள்


இந்த ஆண்டுக்கான நீட் நுழைவு தேர்வு, கொரோனா பிரச்னையால், மே, 3ம் தேதியில் இருந்து தள்ளி வைக்கப்பட்டு, இன்று(செப்.,13) நடந்தது. பலத்த சோதனைக்கு பின்னர் மாணவர்கள் தேர்வு மையத்திற்கு அனுமதிக்கப்பட்டனர். உடல் வெப்ப பரிசோதனை நடந்தது.



இதற்காக, நாடு முழுதும், 3,843 மையங்கள் அமைக்கப்பட்டன. தேர்வு எழுத, 15.67 லட்சம் பேர் விண்ணப்பித்திருந்தனர். தமிழகத்தில், 14 நகரங்களில் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டன. மொத்தம், 1.17 லட்சம் பேர் தேர்வெழுதினர்.

முந்தைய ஆண்டுகளில் ஒரு தேர்வறையில், 24 மாணவ - மாணவியர் தேர்வெழுத அனுமதி வழங்கப் பட்டிருந்தது. இந்த முறை, கொரோனா பிரச்னையால் சமூக இடைவெளியை கடைப்பிடிக்கும் வகையில், ஒரு தேர்வறையில், 12 மாணவர்கள் பங்கேற்றனர்.


latest tamil news




தேர்வு மையத்துக்கு வரும் போது, கட்டாயம் முக கவசம் அணிந்து வர வேண்டும். கைகளை சானிடைசரால் துடைத்த பின், தேர்வு மையத்துக்குள் செல்ல அனுமதி வழங்கப்பட்டது.தேர்வு மையத்துக்குள் செல்லும் போது, மாணவ - மாணவியரின் உடல் வெப்பநிலை, தானியங்கி கருவியால் பரிசோதிக்கப்படும். சராசரி வெப்பநிலையை விட அதிகமாக உள்ள மாணவ - மாணவியரை, தனி அறையில் வைத்திருக்க அனுமதி அளிக்கப்பட்டது.


அடையாள அட்டை


தேர்வு மையத்துக்குள் மின்னணு கருவிகள், புத்தகங்கள் உட்பட வேறு எந்த பொருளும் அனுமதிக்கப்படாது. ஹால் டிக்கெட், அடையாள அட்டை போன்றவற்றை மட்டுமே எடுத்துச் செல்ல வேண்டும்.முக கவசம் கட்டாயம் என்பதை, சில மாணவர்கள் தவறாக பயன்படுத்தி, தேர்வில் முறைகேட்டில் ஈடுபடாமல் தடுக்க, தேர்வு மையங்களில் முக கவசம் வழங்கவும், தேர்வு மைய அலுவலர்களுக்கு, தேசிய தேர்வு முகமை அறிவுறுத்தியுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (15)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
sankaseshan - mumbai,இந்தியா
13-செப்-202019:48:07 IST Report Abuse
sankaseshan தேர்வு எழுதும் மாணவர்களை உற்சாக படுத்து படுத்தாமல் ஆர்ப்பாட்டம் பண்ணுவது DMK யின் கோழை தநம் .
Rate this:
Cancel
ocean - Kadappa,இந்தியா
13-செப்-202018:23:42 IST Report Abuse
ocean ஒருவர் தவறி கீழே விழுந்து தோளில் மூட்டு பிசகி விட்டது. அவர் எம்பிபிஎஸ் மருத்துவரிடம் போனார். அந்த மருத்துவர் தோள் பட்டையை அறுவை செய்து உள்ளே தகடு வைத்து ஜாயிண்ட் செய்யவேண்டும் என்று சொன்னார். இருபது லட்ச ரூபாய் பிடிக்கும் என்று மறுத்துவர் சொல்ல நோயாளி ஏழை என்று தெரிந்த மருத்துவர் திருப்பி அனுப்பிவிட்டார். அந்த நோயாளி புத்தூர் போய் மூட்டு பிசகை மூலிகை மருந்தில் வெற்றிகரமாக சரி செய்து கொண்டார். நீட் தேர்வில் வெற்றி பெற்று மருத்துவரானால் ஏராளமாக சம்பாதிக்கலாம் என்ற பேராசையில் மாணவர்கள் அதிகமாக எழுதுகின்றனர். முன்னர் எம்பிபிஸுக்கு இருந்த மரியாதை இப்போது இல்லை. சித்தா ஆயுர் வேதா போன்ற மருத்துவ படிப்புகளில் விரும்பி படிப்படிக்கும் மாணவர்கள் அதிகரித்து வருகின்றனர். அறுவை வேலைக்கும் ஊசி போடுவதற்கும் மட்டும் தான் எம்பிபிஎஸ் உதவும்.
Rate this:
Cancel
Poongavoor Raghupathy - MUMBAI,இந்தியா
13-செப்-202017:56:29 IST Report Abuse
Poongavoor Raghupathy நீட் கட்டாயம் வேண்டும். நல்ல படித்த டாக்டர் ஒரு கட்டாய நாட்டின் தேவை. மாணவ மாணவிகள் மனது தளராமல் படித்து எழுத வேண்டும்.நீட்டில் தோற்றால் லைப் முடிவதில்லை.உயிரை விடுவது சரியில்லை.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X