பொது செய்தி

இந்தியா

உங்களைப்போல பிற தலைவர்களுக்கு துணிச்சல் இல்லையா?

Updated : செப் 13, 2020 | Added : செப் 13, 2020 | கருத்துகள் (19)
Share
Advertisement
கிருஷ்ணசாமி, வீரமணி, திருமாவளவன், வாசன்

தனியார் பள்ளி மாணவர்களுக்கு, ஹிந்தி கற்கும் வாய்ப்பு இருக்கும் போது, அந்த வாய்ப்பை, அரசு பள்ளி மாணவர்களுக்கு மட்டும் ஏன் நிராகரிக்க வேண்டும்... தமிழ் மொழி, மிக பழமையான மொழி; அதை யாராலும், எந்த சூழ்நிலையிலும், அழிக்க முடியாது. அந்த காரணத்தை காட்டி, அரசு பள்ளி மாணவர்களுக்கு ஹிந்தி கற்கும் வாய்ப்பு மறுக்கப்படக் கூடாது - புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி.


'உங்களைப் போல, பிற தலைவர்கள், துணிச்சலாக சொல்ல மாட்டேன் என்கின்றனரே ஏன்...' என, கேட்கத் தோன்றும் வகையில், புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி அறிக்கை.தி.மு.க.,வின் இதயமாம், பொதுக் குழுவில், முதல் முறையாக எனக்கு பேச வாய்ப்பளித்த தலைவர் ஸ்டாலின் மற்றும் தலைமை கழக நிர்வாகிகளுக்கு நன்றி. எத்தனை இடர் வந்தாலும், தமிழர் நலனுக்காக, தி.மு.க., தொடர்ந்து இயங்கும் என்பதை, அந்த பொதுக் குழு மெய்ப்பித்தது - உதயநிதி ஸ்டாலின்


'நீங்கள் இப்போது தான், முதல் முறையாக பேசுகிறீர்கள். ஆனால், பல ஆண்டு காலமாக பேசிய பலரும், இன்னமும் மேடைக்கு கீழே தான் இருக்கின்றனர்; அவர்கள் எப்போது, மேலே வரப் போகின்றனரோ தெரியவில்லை...' என, கவலையுடன் சொல்லத் தோன்றும் வகையில், தி.மு.க., இளைஞரணி செயலர், உதயநிதி ஸ்டாலின் அறிக்கைஅரசு பணியில் இல்லாதவர்களுக்கும், ஓய்வூதியம் அளிக்கும், அடல் பென்ஷன் திட்டத்தில் இதுவரை, இரண்டு லட்சத்திற்கும் அதிகமான இளைஞர்கள் சேர்ந்துள்ளனர். நடப்பு ஆண்டில் மட்டும், 17 லட்சம் பேர் இணைந்துள்ளனர் - மாநில பா.ஜ., தலைவர் முருகன்.


'எல்லாம் சரி, இந்த சாதாரண திட்டத்திற்கு, இத்தனை ஆண்டுகள் ஆகி விட்டனவா என்ற ஆச்சர்யம் ஏற்படுகிறது...' என, சொல்லத் தோன்றும் வகையில், மாநில பா.ஜ., தலைவர் முருகன் அறிக்கை.ஹிந்திக்கு எதிராக இப்போது முழக்கமிடும், தி.மு.க., மகளிரணி செயலர் கனிமொழி, தன் மகனை, சென்னை அடையாறில் உள்ள, 'சிஷ்யா' அதன் பின், மயிலாப்பூர், வித்யா மந்திரில், சமஸ்கிருதம் மற்றும் ஹிந்தியை படிக்க வைத்து அழகு பார்த்தார். ஆனால் இப்போது, தமிழ் வேடம் போடுகிறார். தமிழகத்திற்கு இரு மொழி, தன் வீட்டிற்கு மும்மொழி தான், அவர் கொள்கையாக உள்ளது - பா.ஜ., தேசிய செயலர் எச்.ராஜா.


'நீங்கள் சொல்லும் மகளிரணி தலைவர் மட்டுமின்றி, அக்கட்சியின் மூத்த தலைவர்கள் பலரின் வாரிசுகள், இப்படித் தான், படிக்கின்றனர்; படித்துள்ளனர்...' என, கூறத் தோன்றும் வகையில், பா.ஜ., தேசிய செயலர் எச்.ராஜா அறிக்கை.மத்தியில் ஆளும், பிரதமர் மோடி அரசின் மொழி வெறி, மத வெறி போக்கை, எங்கள் கட்சி வன்மையாக கண்டிக்கிறது - திருமாவளவன்


'அப்படியே, கண்டித்துக் கொண்டிருப்பீர்கள். திடீரென, பா.ஜ.,வுடன் கூட்டணி வைத்தாலும், வைத்து விடுவீர்கள். அதற்கு, முந்தைய கூட்டணிகளே சாட்சி...' என, சொல்லத் தோன்றும் வகையில், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் அறிக்கை.ஜாதி ஒழிந்தால், 2050 என்ன, 2040ல் கூட, இட ஒதுக்கீட்டை நீக்க முடியும். அதே நேரத்தில், அந்த காலத்திற்குள், சமவெளி - சமதளம் சமுதாயத்தில் ஏற்படுத்தப்பட வேண்டும். எல்லாருக்கும், எல்லாமும் கிட்டினால், இட ஒதுக்கீடு தேவைப்படாது என்பதே எங்கள் கொள்கை - திராவிடர் கழகத் தலைவர் வீரமணி.


latest tamil news

'எல்லாருக்கும், எல்லாமும் கிடைத்தபடி தான் இருக்கு... 'நான் படிக்கவும் மாட்டேன், உழைக்கவும் மாட்டேன்... காலாட்டிக்கிட்டே உட்கார்ந்திருப்பேன்... எனக்கு தட்டும் வந்தாகணும், அதில் சோறும் வந்தாகணும்' என்ற சோம்பேறித்தனத்துக்கு வாளாயிருப்பது நல்லதல்ல...' என, சொல்லத் தோன்றும் வகையில், திராவிடர் கழகத் தலைவர் வீரமணி அறிக்கை.புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்வது உள்ளிட்ட, ஒன்பது அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபட்ட, 5,100 பேருக்கு, தமிழக அரசு நோட்டீஸ் வழங்கியுள்ளது. இதனால் பதவி உயர்வு, ஓய்வு பெற முடியாமல் அரசு ஊழியர், ஆசிரியர்கள் அவதிப்படுகின்றனர் - அரசு ஊழியர் - ஆசிரியர் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் செல்வம்.


'எல்லா வர்க்கத்தினருக்கும் முன்னுதாரணமாய் இருக்க வேண்டிய, குருவாகப் போற்றப்பட வேண்டிய நீங்கள் அனைவரும், மிகவும் கீழ்த்தரமான செயல்களில் ஈடுபடுவது, உங்கள் மனசாட்சியை குத்தவே இல்லையா... போற போக்கைப் பார்த்தா, 'குருகுலம்' மாதிரி, உங்களுக்கு தான் போதனை செய்ய வேண்டும் போலிருக்கு...' எனச் சொல்லத் தோன்றும் வகையில், 'ஜாக்டோ ஜியோ' எனப்படும், அரசு ஊழியர் - ஆசிரியர் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் செல்வம் பேட்டி.தமிழக முதல்வரை வேந்தராக கொண்டு செயல்படும் ஒரே பல்கலைக்கழகமாக, டாக்டர் ஜெயலலிதா இசை மற்றும் கவின்கலை பல்கலைக்கழகம் விளங்குகிறது. புகழ் வாய்ந்த ஓவியங்களின் பிதாமகர்களை போற்றும் விதமாக, பாடத்திட்டத்தில் திருத்தங்கள் செய்து, அவர்களின் வரலாற்றை சேர்க்க வேண்டும். அவர்களை பற்றி வருங்கால சந்ததியினர் படித்து பயன் பெற வேண்டும் - த.மா.கா., தலைவர் வாசன்.


'உங்கள் தந்தை, ஜி.கே.மூப்பனாருக்கு, கவின்கலைகளில் ஆர்வம் என்பதால், தந்தைக்கு மகன் ஆற்றும் தொண்டாக, இதை கேட்கிறீர்களா...' என, கேட்கத் தோன்றும் வகையில், த.மா.கா., தலைவர் வாசன் அறிக்கை.தமிழகத்தில், 'நீட்' தேர்வை தடுத்து நிறுத்த, தீவிரமான முயற்சிகளை, அ.தி.மு.க., அரசு எடுக்கவில்லை. நீட் தேர்வை எதிர்ப்பதை போல, கண்துடைப்பு நாடகத்தை நடத்தி விட்டு, இந்த ஆண்டிலும், நீட் தேர்வு உறுதி செய்யப்பட்டிருக்கிறது. எனவே, நீட் தற்கொலை சாவுகளுக்கு, மத்திய, மாநில அரசுகளே பொறுப்பு - தமிழக காங்கிரஸ் தலைவர் அழகிரி.


'இது போன்ற சாவுகளுக்கு, தற்கொலைகளுக்கு ஆதரவாக பேசும், தமிழக அரசியல் தலைவர்கள் தான், அந்த மரணங்களுக்கு பொறுப்பேற்க வேண்டும்...' என, காட்டமாக கூறத் தோன்றும் வகையில், தமிழக காங்கிரஸ் தலைவர் அழகிரி அறிக்கை.


Advertisement
வாசகர் கருத்து (19)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ocean - Kadappa,இந்தியா
14-செப்-202007:24:35 IST Report Abuse
ocean காப்பியம் இதில் உள்ள இயம் என்ற சொல் அதன் தன்மையைக் குறிப்பது எனில் ஆளியன் என்ற சொல்லின் இயன் என்ற சொல்லும் ஆளின் தன்மையை உணர்த்தும் சொல்லாக கருத வேண்டும். அதை அந்த ஆளின் அறிவாற்றல் தன்மையாக கருதலாம். இயன் என்ற அந்த தன்மையே எதையும் சொல்லில் சரியாக இயம்பி உணர்த்தும் அறிவாற்றல் திறன்.
Rate this:
Cancel
ocean - Kadappa,இந்தியா
14-செப்-202007:06:40 IST Report Abuse
ocean எதிலும் ஆர்வமுடன் செயல் படுபவனை ஆர்யன் என்றனர். அது புலவர் சொல் மரபு வழக்கில் திரிந்து ஆரியன் என்றாகியது. ஆதி மூல ஆரியன் ஒன்றை அதாவது வேத பொருளை ஆர்வமுடன் நன்கு ஓதி உணர்த்துபவன். மனிதரில் அவனை ஏன் தனியாக பிரித்து அடையாளம் காட்டினார் என்றால் அவனுக்கிருந்த ஓதி உணர்த்தும் அறிவு திறன். இவர்கள் ஞானத்தை அறிவாற்றலால் அளந்து சொன்னவர்கள். ஆன்மீகத்தை அறச்செயலாக கொண்டு இமாலய ஆற்றங்கரைகளில் வாழ்ந்தவர்கள். அன்றய கால ஓட்டத்தில் மங்கோலிய கான்கள் அவர்களிடையில் புகுந்து அந்த ஆன்ம நேய ஒருமை பாடு ஆன்மீக வாதிகளை ஏமாற்றி அவர்களும் ஆரியராகி பழையவர்களை நாலா பக்கமும் விரட்டி அடித்தனர். அவர்கள் பிடித்த இடத்தை ஆரிய தேசம் என்றழைத்தனர். இங்கு திராவிடத்திற்கும் ஆரியத்திற்கும் இலக்கணம் கூறும் நண்பர் ஐம்பத்தாறு தேசங்களும் ஆரிய தேசங்கள் தான் என்பதை குறிப்பாக சொல்லவில்லை. ஒரு இடத்தில வசித்தவர்களுடன் திருட்டு தனமாக கலந்த வெளியிட வாழ் கூட்டமும் சேர்ந்து ஆரிய கூட்டமாகினர். ஆரியன் தமிழ் சொல். அதை வடக்கில் ஆரியன் என்று சொல்லமாட்டார்கள் ஆர்யன் என்று அவர்கள் வடமொழியில் தான் சொல்லுவார்கள். தமிழ் இலக்கியங்களில் ஆர்யனை ஆரியனாக்கிய பெருமை தமிழ் புலவர்களுக்கே உரிய தனி திறமை. புலவர்கள் சொற்களின் கவி நயம் வேண்டி அசல் சொற்களை சற்று மாற்றி சொல்லி இருக்கலாம்.
Rate this:
Cancel
வெகுளி - Maatuthaavani,இந்தியா
13-செப்-202018:55:58 IST Report Abuse
வெகுளி வீரமணி ஆசைப்படும் சமவெளி நாகரீகத்தை காண அவர் 2040 வரை காத்திருக்க தேவையில்லை.... ஒரு தமிழ் சினிமாவில் ஏற்கனவே காட்டினானுக......
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X