பொது செய்தி

தமிழ்நாடு

பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு

Added : செப் 13, 2020
Share
Advertisement

பவானிசாகர்: பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதே நிலை நீடித்தால், அணை மீண்டும், 100 அடியை தொடும் என்று, விவசாயிகள் தெரிவித்தனர். பவானிசாகர் அணை நீர்பிடிப்பு பகுதிகளான, நீலகிரி மாவட்டத்தின், பல்வேறு பகுதிகளில், கடந்த சில நாட்களாக மழை பெய்கிறது. தொடர்ந்து மழை பெய்வதால், பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து வருகிறது. நேற்று முன்தினம், 2,787 கனஅடியாக இருந்த நீர்வரத்து, நேற்று காலை, 4,694 கனஅடியாகவும், மாலையில், 6,986 கனஅடியாகவும் அதிகரித்தது. மாலை நிலவரப்படி, அணை நீர்மட்டம், 99.49 அடி, நீர் இருப்பு, 28.3 டி.எம்.சி.,யாக இருந்தது. அணையிலிருந்து அரக்கன் கோட்டை-தடப்பள்ளி பாசனத்துக்கு, 450 கன அடி; கீழ்பவானி வாய்க்காலில், 2,300 கன அடி தண்ணீர் என, 2,750 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. கடந்தாண்டு இதே நாளில், பவானிசாகர் அணை நீர்மட்டம், 96.29 அடியாக இருந்தது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X