பொது செய்தி

தமிழ்நாடு

வங்கி மேலாளர் உட்பட 16 பேருக்கு தொற்று

Added : செப் 13, 2020
Share
Advertisement

சென்னிமலை: சென்னிமலையில் பஸ் ஸ்டாண்ட் அருகில், தனியார் வங்கி உள்ளது. இங்கு மேலாளராக பணிபுரிபவருக்கு, நேற்று தொற்று உறுதி செய்யப்பட்டது. இதேபோல் சென்னிமலை-ஈங்கூர் சாலையில், ஒரு பெண்ணுக்கும், சென்னிமலை குமரன் தெருவில் ஒரு ஆணுக்கும், தொற்று கண்டறியப்பட்டது. மூவரும் பெருந்துறை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.

* சிவகிரியை சேர்ந்த ஐந்து பேர், கொம்பனை புதூரை சேர்ந்த நான்கு பேர், தாமரைபாளையத்தை சேர்ந்த ஒருவர் என, 10 பேருக்கு, நேற்று தொற்று உறுதியானது. இதில் ஆண்கள் நால்வர், பெண்கள் ஐந்து பேர், 10 வயது சிறுமி ஒருவர்.


* பவானி வர்ணாபுரம், மூன்றாவது வீதியை சேர்ந்த, 75 வயது முதியவர், தொற்றால் பாதிக்கப்பட்டார். பவானி பெரியார் நகரை சேர்ந்த ஆண், வெளிநாடு செல்வதற்காக, சில நாட்களுக்கு முன், பவானி அரசு மருத்துவமனையில், பி.சி.ஆர்., பரிசோதனை செய்ததில், தொற்று உறுதியானதால், சுகாதாரத்துறையினர் அவரை வீட்டில் தனிமைப்படுத்தினர். இந்நிலையில் அவருடைய, 24 வயது மனைவியும், தொற்றால் பாதிக்கப்பட்டார். இருவரையும் வீட்டில் தனிமைப்படுத்தி, சுகாதாரத்துறையினர் கண்காணிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X