பொது செய்தி

தமிழ்நாடு

பறவைகள் சரணாலயத்தில் மீண்டும் மேம்பாட்டு பணி

Added : செப் 13, 2020
Share
Advertisement

ஈரோடு: வெள்ளோடு பறவைகள் சரணாலயத்துக்கு, ஈரோடு உட்பட பல்வேறு மாவட்ட மக்கள், சுற்றுலா பயணிகளாக வருகின்றனர். கடந்த, 2019ல், 4.90 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து, மேம்பாட்டு பணி துவங்கியது. கொரோனா ஊரடங்கால் நிறுத்தப்பட்ட நிலையில், மீண்டும் தொடங்கியுள்ளது. இதுகுறித்து ஈரோடு மாவட்ட வன அதிகாரி விஸ்மிஜு விஸ்வநாதன் கூறியதாவது: கொரோனா ஊரடங்கால், சரணாலயத்துக்குள் மக்கள் அனுமதிக்கப்படாத நிலையில், திட்டப்பணி நடந்து வருகிறது. பறவைகள் அமர்ந்து செல்லவும், மரம் வளர்க்கவும், மண் திட்டு அமைத்தல், குளக்கரையை பலப்படுத்துதல், பறவைகள் அமர பனை மரங்கள், சோலார் மின் விளக்கு, கண்காணிப்பு கோபுரம், சிறிய பாலங்கள், மக்கள் அமரும் சாய்வு நாற்காலிகள், நடைபாதைக்கு பேவர் பிளாக் கற்கள், ஓய்வறை அமைக்கப்படுகிறது. அரசு முழு அளவில் தளர்வு அறிவித்ததும், சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்படுவர். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X