ஈரோடு: மாநகராட்சி உதவி கமிஷனர், இடித்து அகற்றிய அதே இடத்தில், மீண்டும் சிலை வைத்து வழிபட, அனுமதி கேட்டு, எஸ்.பி.,யிடம் மனு தரப்பட்டது. ஈரோடு, முத்தம்பாளையம், ஹவுசிங் யூனிட் பகுதி-2 மக்கள், எஸ்.பி., தங்கதுரையிடம், நேற்று அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: ஹவுசிங் யூனிட்டில், அரச மரத்தின் அடியில் விநாயகர் சிலை வைத்து, மூன்றாண்டாக வழிபட்டோம். கடந்த சில நாட்களுக்கு முன், மாநகராட்சி உதவி கமிஷனர் தலைமையிலான ஊழியர்கள், விநாயகர் சிலையை சேதப்படுத்தி அகற்றி விட்டனர். இதுகுறித்து விபரம் கேட்ட மக்களை, டவுன் டி.எஸ்.பி., கைது செய்து விடுவதாக மிரட்டினார். சிலையை அகற்றியவர்கள் மீதும், டி.எஸ்.பி., மீதும், சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். ஏற்கனவே இருந்த இடத்தில், விநாயகர் சிலையை வைத்து, வழிபட அனுமதிக்க வேண்டும். இவ்வாறு மனுவில் தெரிவித்துள்ளனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE