பொது செய்தி

தமிழ்நாடு

மத்திய அரசை கண்டித்து ஈரோட்டில் ஆர்ப்பாட்டம்

Added : செப் 13, 2020
Share
Advertisement

ஈரோடு: தமிழர்களுக்கு விரோதமாக, மத்திய அரசு செயல்படுவதாக கூறி, தமிழர் அமைப்புகள் சார்பில், ஒருங்கிணைப்பாளர் கனகுறிஞ்சி தலைமையில், ஈரோட்டில் ஆர்ப்பாட்டம் நடந்தது. மத்திய அரசு 'நீட்' தேர்வு விவகாரத்தில், தமிழக மாணவர்களை பாதிக்க செய்துள்ளது. ஹிந்தி, சமஸ்கிருத திணிப்பை கைவிட வேண்டும். புதிய கல்வி கொள்கை மூலம், சமூக நீதியை குலைக்கும் செயலை கைவிட வேண்டும். தமிழகத்துக்கான காவிரி நதி நீர் உரிமையில், உரிய பங்களிப்பை வழங்க முன்வர வேண்டும். ஸ்டெர்லைட், சேலம் எட்டு வழிச்சாலை போன்ற திட்டங்களை கைவிட வேண்டும் என வலியுறுத்தினர். தி.மு.க., மாவட்ட துணை செயலாளர் செந்தில்குமார், மாணவரணி அமைப்பாளர் திருவாசகம், பிற அமைப்பு நிர்வாகிகள் ரத்தினசாமி, சண்முகம், நிலவன் உட்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X