பொது செய்தி

தமிழ்நாடு

மாவட்டத்தில் 450 பேர் நீட் தேர்வு எழுதுகின்றனர்

Added : செப் 13, 2020
Share
Advertisement

ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில், 450 மாணவ, மாணவியர், நீட் தேர்வு எழுதுகின்றனர். மருத்துவ கல்லூரிகளில் சேர, நடப்பு கல்வியாண்டில் தேசிய அளவிலான நுழைவுத் தேர்வு (நீட்), தமிழகத்தில், 14 நகரங்களில், 240 மையங்களில் இன்று நடக்கிறது. இதில் ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த, 450 மாணவ, மாணவியர் எழுத உள்ளனர். இதுகுறித்து ஈரோடு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பாலமுரளி கூறியதாவது: மாவட்டத்தில் நீட் தேர்வுக்கு விண்ணப்பித்தவர்களுக்கு, சேலம், கோவை மாவட்டத்தில், மையம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள, 14 வட்டாரங்களில் நீட் பயிற்சி நடத்தப்பட்டது. கொரோனாவால் இ-பாக்ஸ் முறையில் பயிற்சி வழங்கப்பட்டது. இதில், 200 மாணவ, மாணவிகள் பயின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X