பொது செய்தி

தமிழ்நாடு

சாலையை ஆக்கிரமித்து குடிநீர் குழாய் பதிப்பு; ஆனந்தம்பாளையம் பஞ்., செயலால் கொதிப்பு

Added : செப் 13, 2020
Share
Advertisement

அம்மாபேட்டை: அம்மாபேட்டை யூனியன், சிங்கம்பேட்டை பஞ்., ஆனந்தம்பாளையத்தில், சில தனி நபர்களின் தேவைக்காக, மயான சாலையை ஆக்கிரமித்து, குடிநீர் குழாய் பதிக்கப்படுவதாக, எதிர்ப்பு எழுந்துள்ளது. மயான சாலை பகுதி யில், 50 குடும்பத்தினர் வசிக்கிறோம். எங்களுக்கு ஆற்று குடிநீர் வினியோகம் செய்ய, நீர்த்தேக்க தொட்டி கட்டி, இரண்டு மாதமாகிறது. ஆனால், இதுவரை பஞ்., நிர்வாகம், தண்ணீர் வினியோகம் செய்யாமல் இழுத்தடிக்கிறது. இதுகுறித்து கேட்டபோது, அரசு அனுமதி கிடைக்கவில்லை என்று கூறுகின்றனர். ஆனால், தனி நபர்களின் தேவைக்காக, எங்கள் பகுதியை கடந்து, மயான சாலையை ஆக்கிரமித்து, குடிநீர் குழாய் அமைக்கின்றனர். உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால், மறியலில் ஈடுபடுவோம் என்று கூறி, அப்பகுதிவாசிகள் திரண்டனர். அம்மாபேட்டை போலீசார், மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறவே, கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X