சம்பவம் செய்தி

தமிழ்நாடு

800 ஆண்டு பழமையான கோவிலில் சிலையை திருடி வெளியில் வீச்சு

Added : செப் 13, 2020
Share
Advertisement

அந்தியூர்: அந்தியூர் அருகே, நூற்றாண்டு பழமையான கோவில் உற்சவர் சிலையை, திருடிய ஆசாமிகள், கோவில் வெளியே வீசி சென்றது, பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்தியூர் அருகே பட்லூரில், ஹிந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான, ?00 ஆண்டுகள் பழமையான வாகீஸ்வரர் கோவில் உள்ளது. இங்கு உமா மகேஸ்வரி உடனமர் வாகீஸ்வரர், உற்சவமூர்த்தி சிலை, சில ஆண்டுகளுக்கு முன், ஐந்து லட்சம் ரூபாய் மதிப்பில் செய்யப்பட்டது. நேற்று முன்தினம் இரவு, கோவிலின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்த ஆசாமிகள், ஐம்பொன் சுவாமி சிலையை திருடி, மதில் சுவர் அருகே வீசியுள்ளனர். பூஜை பொருட்களை உடைத்தும், கலைத்தும் போட்டு சென்றனர். நேற்று காலை அவ்வழியே சென்ற மக்கள், இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்து, வெள்ளித்திருப்பூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். கோவிலில் விசாரணை செய்த போலீசார், அங்கு வைக்கப்பட்டிருந்த 'சிசிடிவி' கேமரா காட்சி பதிவுகளை ஆய்வு செய்தனர். திருட முயற்சியா அல்லது வேறு காரணமா? என்பது குறித்து, போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X