சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மொபட் மீது கார் மோதல்: சைக்கிள் கடைக்காரர் சாவு

Added : செப் 13, 2020
Share
Advertisement

ஈரோடு: ஈரோடு அருகே, மொபட் மீது கார் மோதியதில், சைக்கிள் கடை உரிமையாளர் இறந்தார். ஈரோடு, ரகுபதிநாயக்கன்பாளையம், ஈ.பி.நகரை சேர்ந்தவர் பெரியண்ணன், 55, சைக்கிள் கடை உரிமையாளர். நேற்று முன்தினம் மாலை, நண்பர் திருப்பதியுடன், 56, மொபட்டில் சொந்த வேலையாக சென்றார். திருப்பதி மொபட்டை ஓட்ட, பெரியண்ணன் அமர்ந்து சென்றார். பூந்துறை சாலை, வாய்க்கால்மேடு அருகே சென்றபோது, எதிர்பாரதவிதமாக மொபட் மீது கார் மோதியது. இதில் இருவரும் தூக்கி வீசப்பட்டனர். இதில், பெரியண்ணன் சாலை சென்டர் மீடியனில் மோதியதில் பலத்த காயமடைந்தார். திருப்பதிக்கு கால் முறிந்தது. அப்பகுதி மக்கள், இருவரையும் மீட்டு, ஈரோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட பெரியண்ணன், அன்றிரவே இறந்தார். திருப்பதி தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார். ஈரோடு தாலுகா போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X