சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மொபட்டை 'லவட்டி' பறந்த கில்லாடி ஆசாமிக்கு காப்பு

Added : செப் 13, 2020
Share
Advertisement

கோபி: கோபி அருகே அயலூரை சேர்ந்தவர் நல்லசாமி, 32; மருந்து வாங்குவதற்காக, டி.வி.எஸ்., எக்சல் மொபட்டில், குருமந்தூர் சென்றார். அங்கு கடை முன், சாவியை எடுக்காமல், மொபட்டை நிறுத்தி சென்றார். அப்போது ஒருவர் மொபட்டை, திருடி ஓட்டிச் சென்றார். நல்லசாமி சத்தமிடவே, வேகமாக சென்றார். அப்பகுதிவாசிகள் ஆசாமியை துரத்தினர். மீனவர் காலனி என்ற இடத்தில், மொபட்டை நிறுத்தி, நெம்பர் பிளேட்டில், பெயின்ட் மூலம் எண்ணை அழித்து கொண்டிருந்தார். அவரை மடக்கி, சிறுவலூர் போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் விசாரணையில், கோபி அருகே குள்ளம்பாளையத்தை சேர்ந்த முருகேசன், 47, என தெரிந்தது. நல்லசாமி புகாரின்படி, முருகேசனை போலீசார் கைது செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X