எஸ்.பி., அலுவலகத்தில் நாய்களால் தொல்லை

Added : செப் 13, 2020
Share
Advertisement

ஈரோடு: எஸ்.பி., அலுவலக வளாகத்தில், நாய் தொல்லை அதிகரித்துள்ளதால், மக்கள் பீதி அடைந்துள்ளனர். ஈரோடு எஸ்.பி., அலுவலக வளாகத்தில், 10க்கும் மேற்பட்ட நாய்கள் சுற்றி திரிகின்றன. கொரோனா பீதியால் சில மாதங்களாகவே, மக்கள் நடமாட்டம் வெகுவாக குறைந்துள்ளது. இந்நிலையில் மனு கொடுக்க வரும், மக்கள் காத்திருக்கும் பகுதி, நிற்கும் இடங்களை, தெருநாய்கள் ஆக்கிரமித்துள்ளன. தற்போது ஊரடங்கு தளர்வால், எஸ்.பி., அலுவலகத்துக்கு, மக்கள் வருவது அதிகரித்துள்ளது. அவ்வாறு வருவோரை, நாய்கள் அச்சுறுத்துகின்றன. பல சமயங்களில், கூட்டமாக சேர்ந்து, மக்களை துரத்துவதால், பலர் பயந்து நடுங்குகின்றனர். நாய்களை கட்டுப்படுத்த, உரிய நடவடிக்கை எடுக்க, மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X