பொது செய்தி

தமிழ்நாடு

கொரோனாவில் மீண்ட காய்கறி வியாபாரி சாவு

Added : செப் 13, 2020
Share
Advertisement

ஆத்தூர்: கொரோனாவில் இருந்து குணமடைந்தும் காய்கறி வியாபாரி பலியானார். ஆத்தூர், ராணிப்பேட்டை, கோவிந்தன் தெருவை சேர்ந்தவர், 60 வயது ஆண். காய்கறி மொத்த வியாபாரம் செய்து வந்தார். கடந்த மாதம், கொரோனாவால் பாதிக்கப்பட்ட இவர், சேலத்தில் உள்ள, தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கடந்த, 10ல், தொற்றில் இருந்து மீண்ட இவர், நேற்று, வீட்டுக்கு செல்லவிருந்தார். ஆனால், நேற்று முன்தினம் இரவு, இருதய வலி ஏற்பட்டு உயிரிழந்தார். அவரது குடும்பத்தில், மேலும் ஆறு பேர் தொற்றால் பாதிக்கப்பட்டனர். அதில், நான்கு பேர், நேற்று முன்தினம் குணமடைந்தனர். மீதி இருவர், மருத்துவமனையில் உள்ளனர். நேற்று, ஆத்தூர் நகராட்சி சுகாதாரத்துறையினர், ராணிப்பேட்டையில், கிருமி நாசினி தெளிப்பு உள்ளிட்ட நோய் தடுப்பு பணியில் ஈடுபட்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X