பொது செய்தி

தமிழ்நாடு

ராணுவ கல்லூரி தேர்வு: 6 மாணவர் பங்கேற்பு

Added : செப் 13, 2020
Share
Advertisement

சேலம்: இந்திய தேசிய ராணுவ கல்லூரி நுழைவுத்தேர்வில், ஆறு மாணவர் பங்கேற்றனர். உத்தர்கண்ட், டேராடூனில், இந்திய தேசிய ராணுவ கல்லூரி உள்ளது. அங்கு, ஜனவரி, ஜூலையில், நுழைவு தேர்வு நடத்தி, மாணவர் சேர்க்கை நடக்கிறது. தற்போது, கொரோனாவால் தாமதமாக, நேற்று, தேர்வு நடத்தப்பட்டது. அதன் மையமான, சேலம், கலெக்டர் அலுவலக வளாகம், அறை எண், 115ல் நடந்த தேர்வில், ஆறு மாணவர் பங்கேற்றனர். ஏழாவது படிப்போர், ஏழாவது முடித்த, 13 வயதுக்கு உட்பட்டோர், இத்தேர்வை எழுதலாம். ஆங்கிலம், 125, கணிதம், 200, பொது அறிவு தேர்வில், 75 என, 400 மதிப்பெண்ணுக்கு தேர்வு நடந்தது. அடுத்து நடக்கும் நேர்காணல் தேர்வுக்கு, 50 மதிப்பெண். இதில், நாடு முழுதும் தேர்ச்சி பெறும் 25 பேர், கல்லூரியில் படிக்க அனுமதிக்கப்படுவர் என, அதிகாரிகள் தெரிவித்தனர். டி.என்.பி.எஸ்.சி., குழு உறுப்பினர் கிருஷ்ணகுமார் தலைமையில், கலெக்டர் ராமன், டி.ஆர்.ஓ., சுகுமார் ஆகியோர், தேர்வு மையத்தில் ஆய்வு செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X