பொது செய்தி

தமிழ்நாடு

கே.கே.நகரை சூழ்ந்த மழைநீரால் மக்கள் தத்தளிப்பு

Added : செப் 13, 2020
Share
Advertisement

சேலம்: கே.கே.நகர் குடியிருப்புகளை மழைநீர் சூழ்ந்ததால், மக்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர்.


சேலம், கோரிமேடு, கே.கே.நகரில், 500க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. அங்கிருந்து மழைநீர் செல்ல வடிகால் வசதியில்லாததால், மழைக்காலங்களில், ஏற்காடு பிரதான சாலையில், தண்ணீர் தேங்கும். இரு ஆண்டுக்கு முன், ஏற்காடு பிரதான சாலை, 4 அடி வரை உயர்த்தப்பட்டது. மழைக்காலங்களில், கே.கே.நகரில் தேங்கும் தண்ணீரை வெளியேற்ற, மாநகராட்சி சார்பில், மோட்டார் பொருத்தப்பட்டு, குழாய் மூலம் கால்வாயில் இணைக்கப்பட்டது. இந்நிலையில், சில நாளாக பெய்து வரும் மழையால், எம்.ஜி.ஆர்., நகர் பகுதியிலிருந்து வெளியேறும் மழைநீர், என்.ஜி.ஜி.ஓ., காலனி வழியாக, கே.கே.நகரை சூழ்ந்தது. தண்ணீரை வெளியேற்றும் மோட்டார் பழுதால், மழைநீர் சூழப்பட்டு, வீட்டைவிட்டு வெளியே வர முடியாமல், மக்கள் தவித்து வருகின்றனர்.

இதுகுறித்து, மக்கள் கூறியதாவது: மழைநீர் வெளியேற, முறையாக கால்வாய் வசதி அமைக்காமல், அப்போதைக்கு சமாளிக்க, மோட்டார் மூலம் தண்ணீரை வெளியேற்றும் வசதியை செய்தனர். மோட்டார் பழுதானால், அதை சரிசெய்ய பல வாரமாகிறது. இதனால், மழைக்காலங்களில் வீடுகள், தீவுகள் போல் துண்டிக்கப்படுகின்றன. நீர்வழித்தடத்தில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்றி, முறையான கால்வாய் வசதி ஏற்படுத்தித்தர, அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X