பொது செய்தி

தமிழ்நாடு

சாலையில் பள்ளம் வெட்டி ஏரி உபரிநீர் வெளியேற்றம்

Added : செப் 13, 2020
Share
Advertisement

சேலம்: சேலத்தாம்பட்டி ஏரி உபரிநீரை, சாலை குறுக்கே பள்ளம் வெட்டி, அதன் வழியாக சிமென்ட் கான்கிரீட் வாய்க்காலுக்கு திருப்பி விடப்பட்டுள்ளது.


சேலம், சிவதாபுரம், சேலத்தாம்பட்டி ஏரி நிரம்பி, வெளியேறிய உபரிநீர், தாழ்வான பகுதியில் உள்ள குடியிருப்புகளை சூழ்ந்தது. இதனால், கலெக்டர் ராமன், நேற்று, அப்பகுதியில் ஆய்வு செய்தார். பின், அவர் கூறியதாவது: தாமரை ஏரி நிரம்பி, அதன் உபரிநீரால், தளவாய்பட்டி, வளையப்பட்டி ஏரிகளும், அடுத்தடுத்து நிரம்பின. அதிலிருந்து, வெளியேறிய தண்ணீர், சேலத்தாம்பட்டி ஏரிக்கு வந்ததால், அந்த ஏரியும் நிரம்பி, தண்ணீர் ஊருக்குள் புகுந்து விட்டது. பொக்லைன் உதவியுடன், சாலை குறுக்கே, பள்ளம் வெட்டி, நீர்வழிபோக்கி ஏற்படுத்தி, அதன் வழியாக, மறுபுறமுள்ள சிமென்ட் கான்கிரீட் வாய்க்காலில், தண்ணீர் திருப்பி விடப்பட்டுள்ளது. அதன்மூலம், குடியிருப்புகளை சூழ்ந்த வெள்ளம், முற்றிலும் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X