பொது செய்தி

தமிழ்நாடு

'எமிஸ்' பதிவில் அலட்சியம்: பள்ளிகளுக்கு எச்சரிக்கை

Added : செப் 13, 2020
Share
Advertisement

சேலம்: மாணவர் சேர்க்கை விபரங்களை, ஆன்லைனில் பதிவு செய்யும் பணியை, 826 பள்ளிகள் தொடங்காததால், உடனே பதிவேற்ற உத்தரவிடப்பட்டுள்ளது.


சேலம் மாவட்டத்தில், அரசு, தனியார் உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகள், 532, துவக்க, நடுநிலைப்பள்ளிகள், 1,800க்கும் மேற்பட்டவை உள்ளன. இவற்றில், கடந்த ஆக., 17 முதல், மாணவர் சேர்க்கை நடத்த அனுமதிக்கப்பட்டுள்ளது. அத்துடன், சேர்க்கை, பள்ளியிலிருந்து வெளியேறும் மாணவருக்கு மாற்றுச்சான்றிதழ் வழங்கல் உள்ளிட்ட விபரங்களை, 'எமிஸ்' எனும் கல்வி மேலாண் தொகுப்பு இணையதளத்தில், உடனுக்குடன் பதிவேற்ற உத்தரவிடப்பட்டுள்ளது. அத்தகவல் அடிப்படையில், பாடப்புத்தகம், உதவித்தொகை உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகின்றன. சேர்க்கை தொடங்கி, 20 நாளுக்கு மேலான நிலையில், இன்னும் பல பள்ளிகளில், 'எமிஸ்' இணையதளத்தில் பதிவு செய்வது தொடங்கப்படவில்லை. அதன்படி, சேலம் மாவட்டத்தில், 826 பள்ளிகள் கண்டறியப்பட்டுள்ளன. இதனால், மாணவ, மாணவியருக்கு நலத்திட்ட உதவிகள் கிடைப்பதில் தாமதம் ஏற்படும் என்பதால், இப்பள்ளிகளை தொடர்பு கொண்டு, உடனே விபரங்களை ஆன்லைனில் பதிவேற்றம் செய்ய, வட்டார கல்வி அலுவலர்களுக்கு, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கணேஷ்மூர்த்தி உத்தரவிட்டுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X