பொது செய்தி

தமிழ்நாடு

வெள்ளப்பெருக்கால் 3 ஏரிகள் நிரம்பியதால் மகிழ்ச்சி

Added : செப் 13, 2020
Share
Advertisement

ஆத்தூர்: கல்வராயன்மலை ஆறுகளில் வெள்ளப்பெருக்கால், முட்டல் ஏரி உள்பட மூன்று ஏரிகள் நிரம்பியதால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.


பெத்தநாயக்கன்பாளையம், கீழ்நாடு ஊராட்சி, பெரியகல்வராயன் மலையில் உற்பத்தியாகும் கல்லாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால், மாயம்பாடி, கல்படை, மல்லிகைபாடி ஆறுகள் வழியாக, கச்சிராப்பாளையம் கோமுகி அணைக்கு, தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. கல்வராயன்மலை ஆணைவாரி, தேனூற்றுவாரி, தேம்பாவடி போன்ற ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பெரிய, சின்ன கல்ராயன்மலை இணையும் இடத்தில், 300 ஏக்கரில் உள்ள முட்டல் ஏரிக்கும் நீர்வரத்து அதிகரித்தது. தற்போது, அந்த ஏரி நிரம்பி, மதகுகள், தடுப்பணை வழியாக உபரிநீர் வெளியேறுகிறது. ஆத்தூர் நகராட்சியின் குடிநீர் ஆதாரமாக உள்ள முட்டல் ஏரி நிரம்பியதால், குடிநீர் நீரேற்று கிணற்றிலிருந்து, அதிகளவில் தண்ணீர் எடுக்கப்படுகிறது. அதேபோல், தென்னங்குடிபாளையத்தில் உள்ள புது ஏரி, தம்மம்பட்டி அருகே, ஜங்கமசமுத்திரம் ஏரியும் நிரம்பியுள்ளது. ஆத்தூர் வழியாக செல்லும் வசிஷ்ட நதிக்கு தண்ணீர் வருவதால், நரசிங்கபுரம் அணைமேடு நிரம்பி வருகிறது. இதனால், நிலத்தடி நீர் மட்டம் உயர்வதால், பாசன விவசாயிகள், மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

தடை: வனத்துறையினர் கூறுகையில், 'கல்வராயன்மலை அடிவாரமுள்ள முட்டல் கிராமத்தில், மலைக்குன்றுகளுக்கு இடையே, ஏரி, ஆணைவாரி நீர்வீழ்ச்சி உள்ளது. கனமழையால், நீர்வீழ்ச்சி வழிப்பாதை, ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. அதனால், சுற்றுலாப்பயணியர் யாரும் செல்லக்கூடாது. அரசு அனுமதிக்கு பின், வனத்துறை, 'சூழல் சுற்றுலா' திட்டத்தில், முட்டல் ஏரியில், படகு சவாரி, குடில்கள் பயன்பாட்டுக்கு வரும்' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X