பொது செய்தி

தமிழ்நாடு

அம்மா சிமென்ட் கிடைக்காததால் அவதி

Added : செப் 13, 2020
Share
Advertisement

கொளத்தூர்: புதிதாக வீடு கட்டுவோர், புளூ பிரின்ட் உள்ளிட்ட சான்று வழங்கினால், ஒன்றிய அலுவலகத்தில், அம்மா சிமென்ட் ஒரு மூட்டை, 190 ரூபாய்க்கு வழங்கப்படும். 1,000 சதுரடி வீட்டுக்கு, 500 மூட்டை சிமென்ட் வீதம், அதிகபட்சம் ஒருவருக்கு, 1,500 சதுரடி கட்டடத்துக்கு, 750 மூட்டை வழங்கப்படும். சிமென்ட் உற்பத்தி விலை அதிகரித்ததால், அதற்கேற்ப, அரசு, விலையை உயர்த்தக்கோரி, மூன்று மாதமாக, ஆலைகள், சிமென்ட் வினியோகத்தை நிறுத்தியுள்ளன. இதனால், கொளத்தூர் ஒன்றியத்துக்கு, சிமென்ட் மூட்டைகள், மூன்று மாதமாக வினியோகிக்கப்படவில்லை. இதனால், ஏற்கனவே சிமென்ட் வாங்க பணம் செலுத்திய, 16 பயனாளிகள், மூட்டை கிடைக்காமல் தவிக்கின்றனர். மேலும், 250க்கும் மேற்பட்டோர், சிமென்ட் கேட்டு, ஒன்றிய அலுவலகத்தில் விண்ணப்பித்துள்ளனர். சிமென்ட் வர தாமதம் ஆவதால் விண்ணப்பம் கொடுத்த மக்கள், கட்டுமானப்பணியை பாதியில் நிறுத்தி வைத்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X