பொது செய்தி

தமிழ்நாடு

அரசு பள்ளி ஆசிரியைக்கு 'வைரஸ்': 100க்கும் மேற்பட்டோர் கலக்கம்

Added : செப் 13, 2020
Share
Advertisement

சேலம்: அரசு மகளிர் பள்ளி ஆசிரியைக்கு கொரோனா தொற்று உறுதியானதால், அவருடன் பணிக்கு வந்த, 100க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பீதியடைந்துள்ளனர்.


சேலம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில், 200க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பணிபுரிகின்றனர். சில நாளாக, அங்கு, மாணவர் சேர்க்கை நடந்து வருகிறது. இதற்காக, அனைத்து ஆசிரியர்களையும், பணிக்கு திரும்ப, தலைமை ஆசிரியர் உத்தரவிட்டுள்ளார். இந்நிலையில், இரு நாளுக்கு முன், 40 வயது ஆசிரியைக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், அவருடன் பணிபுரிந்த, 100க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் கலக்கம் அடைந்துள்ளனர்.

இதுகுறித்து, ஆசிரியர்கள் கூறியதாவது: மாணவர் சேர்க்கை நிறைவடைந்த நிலையில், ஆசிரியர் பணி வெகுவாக குறைந்துள்ளது. அனைத்து பள்ளிகளிலும், ஓரிரு ஆசிரியர்கள் சுழற்சி முறையில் பணிபுரிகின்றனர். இங்கு மட்டும் அனைவரையம் வர வலியுறுத்துகின்றனர். சமூக இடைவெளியில்லாமல் பணிபுரிந்த நிலையில், தொற்று ஏற்பட்டுள்ளதால், மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளோம். அரசு உத்தரவு வரும் வரை, மற்ற பள்ளிகளை போன்று, சுழற்சி முறையில் பணிபுரிய, கல்வித்துறை அலுவலர்கள் உத்தரவிட வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X