பொது செய்தி

தமிழ்நாடு

சேலத்தில் 30 மையத்தில் இன்று 'நீட்' தேர்வு: நோய் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை

Added : செப் 13, 2020
Share
Advertisement

சேலம்: சேலம் மாவட்டத்தில், இன்று, 30 மையங்களில், 15 ஆயிரத்து, 138 மாணவ, மாணவியர், 'நீட்' தேர்வு எழுத உள்ளனர். அதற்காக, தேர்வு மையங்களில், கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.


மருத்துவ படிப்பில் சேர்வதற்கான, 'நீட்' நுழைவுத்தேர்வு, நாடு முழுதும் இன்று நடக்கிறது. கொரோனா தடுப்பு நடவடிக்கையாக, சமூக இடைவெளியில் தேர்வெழுத, ஒரு அறைக்கு, 12 பேர் மட்டும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளனர். மைய வளாகம் முழுதும் கிருமி நாசினியால் சுத்தப்படுத்தும் பணி, தேர்வு முன்னேற்பாடு பணிகள், நேற்று மேற்கொள்ளப்பட்டன. சேலம் மாவட்டத்தில், 'நீட்' தேர்வு நடக்கும் மையங்கள்(ஒதுக்கப்பட்ட மாணவர் எண்ணிக்கை அடைப்பில்): ஆத்தூர் ஜெய்வின்ஸ் அகாடமி(300), காகாபாளையம் நாலெட்ஜ் கல்லூரி(600), பூசாரிப்பட்டி நரசுஸ் சாரதி கல்லூரி(360), மின்னாம்பள்ளி மகேந்திரா இன்ஜினியரிங்(420), மேச்சேரி காவேரி இன்ஜினியரிங்(840), சேலம் சோனா(900), சேலம் இன்ஜினியரிங்(360), விநாயகா மிஷன்ஸ் இன்ஜினியரிங்(480), வைஸ்யா கல்லூரி(960), அன்னபூர்ணா இன்ஜினியரிங்(300), சங்ககிரி சண்முகா கல்லூரி(300), சேலம் ஏ.வி.எஸ்.,(720), சக்தி கைலாஷ் மகளிர் கல்லூரி(960), ராமலிங்கபுரம் ஏ.வி.எஸ்.,(480). சேலம் கிளேஸ்புரூக் பள்ளி(360), சிவாஜி நகர் வித்யாமந்திர் பள்ளி(720), அயோத்தியாப்பட்டணம் வித்யாமந்திர்(240), கைலாஷ் மானசரோவர்(300), சுவாமி இன்டர்நேஷனல்(138), தலைவாசல் தாகூர் பப்ளிக்(300), கொண்டலாம்பட்டி வித்யாமந்திர்(240), மல்லூர் வி.ஜி.விகாஸ்(240), குகை வித்யாமந்திர்(480), நோட்ரிடேம் பள்ளி(900), எமரால்டு வேலி(600), செந்தில் பப்ளிக்(840), சேஷாஸ்(540), கல்பாரப்பட்டி ஜீவா பப்ளிக்(240), மெய்யனூர் வித்யாமந்திர்(420), ஜெய்ராம் பப்ளிக் பள்ளி(600).

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X