சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ஓட்டலுக்கு 'சீல்' எச்சரிக்கை: உரிமையாளர் தீக்குளிக்க முயற்சி

Added : செப் 13, 2020
Share
Advertisement

சேலம்: ஓட்டலுக்கு, 'சீல்' வைப்பதாக, சுகாதாரத்துறையினர் எச்சரித்ததால், உரிமையாளர் தீக்குளிக்க முயன்றார்.


திருவாரூர் மாவட்டம், குடவாசல், புதுக்குடியை சேர்ந்தவர் பிரதீப், 24. கேட்டரிங் படிப்பு முடித்துள்ள இவர், சேலம், அயோத்தியாப்பட்டணத்தில் குடிபெயர்ந்து, 'அயோத்தி பவன்' பெயரில், ஒன்றரை ஆண்டாக ஓட்டல் நடத்துகிறார். அவரது தந்தை ராஜா, மகன் தொழிலுக்கு உதவியாக உள்ளார். நேற்று காலை, 11:30 மணிக்கு, காரிப்பட்டி, சுகாதாரத்துறையினர், ஓட்டலில் ஆய்வு நடத்தினர். அப்போது, முக கவசம் இன்றி, சமூக இடைவெளியை பின்பற்றாமல், வாடிக்கையாளர் சிலர் இருந்தது கண்டுபிடித்து, 500 ரூபாய் அபராதம் விதித்து வசூலிக்கப்பட்டுள்ளது. அப்போது, ஏற்பட்ட வாக்குவாதத்தில், ஓட்டலுக்கு, 'சீல்' வைப்பதாக, அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். இதனால், வேதனை அடைந்த பிரதீப், மதியம், 2.30 மணிக்கு, கலெக்டர் அலுவலக நுழைவாயில் முன், தன் உடல் மீது, மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார், அவரை, தடுத்து நிறுத்தி மீட்டனர். பின், சேலம், அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, மேல் விசாரணை நடக்கிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X