சம்பவம் செய்தி

தமிழ்நாடு

விவசாய நிலத்தில் தேங்கிய தண்ணீரில் குளித்தவர் சாவு

Added : செப் 13, 2020
Share
Advertisement

சங்ககிரி: விவசாய நிலத்தில் தேங்கி நின்ற தண்ணீரில் குளித்த தொழிலாளி பலியானார். இடைப்பாடி அருகே, இருப்பாளி, கலர்பட்டியை சேர்ந்த, முத்தண்ணன் மகன் தவசி, 21; கூலித்தொழிலாளியான இவர், நேற்று, அதே பகுதியைச் சேர்ந்த, நண்பர்களான ராஜேந்திரன், பிரபாகரன் ஆகியோருடன், தேவூர், வெள்ளூற்று பெருமாள் கோவிலுக்கு சென்றுவிட்டு, அருகில் உள்ள, கிருஷ்ணமூர்த்திக்கு சொந்தமான விவசாய நிலத்தில், மழைநீர் தேங்கி நின்ற குட்டையில் குளித்தனர். தலைகீழாக பல்டி அடித்து குதித்த தவசி, நீண்ட நேரமாகியும் மேலே வராததால், நண்பர்கள் தேடினர். அப்போது, 5 அடி ஆழத்தில், தவசி மூழ்கி கிடந்தார். அவரை மீட்டு, இடைப்பாடி அரசு மருத்துவமனையில் சேர்த்தபோது, அவர் இறந்து விட்டதாக மருத்துவர்கள் கூறினர். தேவூர் போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X